இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் வரும் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தான் தயாரித்துள்ள இப்படத்துக்கான விளம்பரப் பணிகளில் முழு மூச்சாக இறங்கியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா ரிலீஸ் ஆக இப்படம் வெளியாகவுள்ளதால் பல மொழிகளிலும் படத்தை புரொமோட் செய்துவருகிறார் கமல்.


விக்ரம் படத்தைப் பொறுத்தவரை சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட யாரும் இப்படத்தைக் கண்டுகளிக்கலாம். 12 வயதுக்குக் குறைவாக உள்ளோர் பெற்றோரின் வழிகாட்டுதலின்படி படத்தைக் காணலாம். இந்நிலையில் விக்ரம் சென்சார் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.



மேலும் படிக்க | ஷங்கர் இயக்கும் ராம் சரண் படத்தின் டைட்டில்! - தலைப்புக்கு இதுதான் ரீஸனா?!


அதாவது இப்படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்  குறித்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. சர்ச்சைக்குரிய வசனங்கள், தவிர்க்கப்படவேண்டிய காட்சிகள், ஒலி துண்டிக்கப்பட்ட காட்சிகள் என பல விபரங்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதன்படி 22 நொடிக் காட்சிகள் சென்சாரின்போது கட் செய்யப்பட்டுள்ளன.



கமலுக்கு, விஸ்வரூபம்- 2 படத்துக்குப் பின் அதாவது, சுமார் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் படம் விக்ரம். அதனால் சினிமா ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்குப்  பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


மேலும் படிக்க | துப்பாக்கி சுடும் தளத்தில் நடிகர் அஜித்- வைரல் புகைப்படங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!