தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


தமிழ் சின்னத்திரையில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மகா அஞ்சலிக்கு கல்யாணம் செய்ய முடிவு எடுக்க ராம் மகாவிடம் பேச வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


டென்ஷன் ஆகும் மகா


அதாவது, ராம் மற்றும் சத்யா என இருவரும் மகாவிடம் வந்து எதுக்கு இப்போ அஞ்சலிக்கு கல்யாணம் பண்ண முடிவெடுத்தீங்க என்று கேள்வி கேட்க மகா அவ என்னுடைய பொண்ணு என்று சொல்ல சத்யா அவ உங்க பொண்ணு கிடையாது நீங்க அவருக்கு சித்தி தானே என்று சொன்னது மகா டென்ஷன் ஆகிறாள். 


அதிர்ச்சி அடையும் சீதா


ராமிடம் உங்கள வளர்த்த எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க கூட உரிமை கிடையாது என்று சென்டிமென்ட் ஆக பேச ராம் மனம் மாறிவிட அதைப் பார்த்து சீதாவும் மீராவும் அதிர்ச்சி அடைகின்றனர். சத்தியம் மட்டும் அஞ்சலிக்கு விருப்பமில்லாத கல்யாணத்தை எப்படி பண்ணி வைக்கலாம் என்று கேள்வி கேட்க ராம் அவனையும் சமாதானப்படுத்தி அழைத்து வந்து விடுகிறார். 



மேலும் படிக்க | என்னை எதிர்பதற்க்காக எடுக்கப்படும் படங்களில் கிராஃப்ட் அடிப்படையில் கூட சரியாக இல்லை: பா இரஞ்சித்


இதனால் அஞ்சலி பயங்கர அப்செட்டில் இருக்க மற்ற தங்கைகள் ராம் அண்ணா இல்லன்னா என்ன சீதா அண்ணி கண்டிப்பாக இந்த கல்யாணத்தை நடத்த விட மாட்டாங்க என்று சொல்ல அஞ்சலி சித்தியை மீறி என்ன பண்ண முடியும் ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்லி வருத்தப்படுகிறாள். 


மறுபக்கம் சீதா இந்த கல்யாணத்தை நான் நடத்த விட மாட்டேன் என்று மகாவிடம் சவால் விட அவள் உன்னால் முடிந்ததை பார்த்துக்கோ என்று சொல்கிறாள். பிறகு அஞ்சலி ரூமில் இருந்து தங்கைகளை வெளியே அனுப்பிவிட்டு தன்னுடைய காதலனுக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்லி நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கலாம், இந்த ஊரைவிட்டு போயிடலாம் என்று சொல்கிறாள். 


அஞ்சலியின் காதலனும் நான் நாளைக்கு பாத்துட்டு சொல்றேன் என்று ஃபோனை வைக்க மறுநாள் அஞ்சலி வீட்டில் இல்லாததால் எல்லோரும் தேட அஞ்சலி காதலன் போனில் பேசிக் கொண்டிருக்க சீதாவுக்கு வந்துவிட அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | ரம்ஜானுக்கு ட்ரீட்.. விஜயின் 'GOAT' படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ