ரம்ஜானுக்கு ட்ரீட்.. விஜயின் 'GOAT' படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vijay's Goat Movie Release Date : GOAT படத்தின் அப்டேட்டை படத்தின் தயாரிப்பளார் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது X தளத்தில் வெளியிட்டுள்ளார். அதன் விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 11, 2024, 02:06 PM IST
  • வெங்கட் பிரபுவுடன் விஜய் தனது அடுத்த படத்தை அறிவித்தபோது, ​​ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
  • கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகயுள்ளது.
  • அர்ச்சனா கல்பாத்தி தனது X தளத்தில் தகவலை வெளியிட்டுள்ளார்.
ரம்ஜானுக்கு ட்ரீட்.. விஜயின் 'GOAT' படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு! title=

Vijay's Goat Movie Release Date : விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 68. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு GOAT - The Greatest Of All The Time ( ) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகி பாபு, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என பலர் நடித்து வருகின்றனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மேலும் பிகில் படத்திற்கு பிறகு இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு தொடங்கிய GOAT படத்தின் படப்பிடிப்பு சென்னை, தென்னாப்ரிக்கா, ஹைதராபாத், புதுச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்றது. தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.

வித்தியாசமான திரைப்படத் தயாரிப்பில் இருக்கும் வெங்கட் பிரபுவுடன் விஜய் தனது அடுத்த படத்தை அறிவித்தபோது, ​​ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் படிக்க | ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான்! வெளியானது டைட்டில்

இந்நிலையில் தற்போது கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி அதாவது விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகயுள்ளதாக படத்தின் தயாரிப்பளார் அர்ச்சனா கல்பாத்தி தனது X தளத்தில் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை ஜூன் மாதம் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்பட்டது. இதை டார்கெட்டாக வைத்து படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது என பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்த படத்தின் சூட்டிங் மாஸ்கோவில் துவங்கிய நிலையில் படத்தின் சூட்டிங் நடக்கும் லொகேஷன்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்திருந்தார். அதேபோல் இரண்டு நாட்களுக்கு முன்னர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் மாஸ்கோ நகர வீதிகளில் ஸ்கேட்டிங் பயிற்சி செய்யும்படியான வீடியோவை பகிர்ந்திருந்தார். இந்த வீடியோவில் சிறு பிள்ளையைப் போல நடிகர் விஜய் மாஸ்கோவில் சூட்டிங் நடைபெறும் இடத்தில் ஸ்கேட்டிங் பழகியதை பார்க்க முடிந்தது. இந்த வீடியோ தற்போது வரை இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கியுள்ள சம்பளம் விவரம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News