தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கல்பனாவை ரவுண்ட் கட்டி எல்லாரும் சந்தேகத்துடன் கேள்வி கேட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


கடுப்பான கல்பனா


அதாவது, நான்ஸி அங்கு வந்து அர்ச்சனா இந்த வீட்டோட பொண்ணு தானே, அவளை நம்பாமல் இப்படி கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க என்று கூட்டத்தை கலைத்து விடுகிறாள். பிறகு சேது லாக்கர் சாவியை நீயே வச்சிக்கமா என்று சீதாவிடம் சொல்ல கல்பனா கடுப்பாகிறாள். 


அர்ச்சனா மீது சந்தேகம்


இதனையடுத்து ராம் சீதா கார்டனில் அமர்ந்து அன்பாக பேசி கொண்டிருக்கும் போது அங்கு வரும் மீரா, துரை ஆகியோர் அர்ச்சனா மீது சந்தேகம் இருப்பதாக சொல்கின்றனர், அடுத்த மகாலக்ஷ்மியாக முயற்சி செய்வதாக சொல்ல சீதா அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல, ஒரே ஒரு மகாலக்ஷ்மி தான். அவங்க இடத்துக்கு யாரும் வர முடியாது என்று சொல்கிறாள். 


மேலும் படிக்க | Vishal: “முட்டாளின் செயல்..” த்ரிஷா குறித்த சர்ச்சைக்கு நடிகர் விஷால் கண்டனம்!


நான்சியிடம் பேசும் கல்பனா


பிறகு சீதாவுக்கு மருந்து கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடக்க கல்பனா நான்சியிடம் நான் கோர்ட்ல வந்து நீ சொன்ன மாதிரி சொல்றேன், ஆனால் நீ அர்ச்சனாவை திரும்பவும் இந்த வீட்டுக்குள்ள வர விடாமல் பார்த்துக்கணும் என்று சொல்கிறாள். பிறகு சீதாவுக்கு மருந்து கொடுக்க தொடங்க கடைசியாக ராஜசேகர் வரிசை தட்டுகளுடன் வருகிறார். 



காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள புதிய திரைப்படம்! மார்ச் 1ம் தேதி ரிலீஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ