தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கோவிலில் வைத்து மர்ம நபர்கள் மகாவை சுட முயற்சி செய்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது மீராவும் சீதாவும் சேர்ந்து மகாவை காப்பாற்றி விட வீட்டிற்கு வரும் போலீஸ் ராமிடம் இது என்னவோ குடும்ப பகை மாதிரி இருக்கு, யாருனு கூடிய சீக்கிரம் கண்டு பிடிக்கிறோம் என்று சொல்லி கிளம்பி செல்கின்றனர். 


ராமுக்கு அதிர்ச்சி


இதனையடுத்து ராஜசேகர் அப்படினா அடுத்த டார்கெட் சேது தான் என்று சொல்ல ராம் அதிர்ச்சி அடைகிறான். அப்பாவை எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என முடிவெடுத்து இரவெல்லாம் தூங்காமல் வெளியில் காவல் காக்கிறான், அடிக்கடி ரூமுக்குள் வந்து அப்பாவை கண் கணித்து கொண்டே இருக்கிறான். 


மேலும் படிக்க | கடைசி படத்திற்கு தளபதி விஜய் வாங்கப்போகும் சம்பளம் இவ்வளவு கோடிகளா?


சீதாவை பின்தொடரும் ராம்


அதுமட்டுமின்றி சேதுவின் ரூமையும் மாற்றி கொண்டே இருக்கிறான். இந்த நிலையில் சீதா யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் தனியா வெளியே செல்ல ராம் இதனை பார்த்து விட்டு அவளை பின் தொடர்கிறான். 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள 4 சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ