தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராம் சீதாவை கைது செய்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


மயங்கி விழும் உமா


அதாவது, ராம் சீதாவை கைது செய்து அழைத்து செல்ல அனைவரும் அதிர்ச்சியடைய உமா மயங்கி விழுகிறாள். அதன் தொடர்ச்சியாக ராம் சீதாவை ஜெயிலுக்குள் அடைக்க சீதா ராமுடனான நினைவுகளை நினைத்து பார்க்கிறாள்.



அதே போல் ராம் சீதா தனக்காக போலீஸ் ட்ரஸ் தைத்து கொடுத்தது, தனது கனவை அவளது கனவாக நினைத்தது போன்றவற்றை நினைத்து பார்த்து அவளையே கைது செய்ய வேண்டியதாகி விட்டது என வருந்துகிறான். 


குழப்பத்தில் இருக்கும் அர்ச்சனா


வீட்டில் அர்ச்சனா சீதாவா மகாவை கொன்னா? அப்படினா கல்பனா எதுக்கு பணத்தை கேட்கிறாள் என குழப்பத்தில் இருக்க கல்பனா போன் செய்து பணத்தை கேட்டு மிரட்டுகிறாள். இப்போ மகாவும் இல்ல அந்த சீதாவும் போய்ட்டா அப்புறம் என்ன பணத்தை சீக்கிரமா அனுப்பு. நான் எனக்கு ஒன்னும் கேட்கல என்று சொல்கிறாள். 


மேலும் படிக்க | இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவால் காலமானார்!


அதே போல் சுபாஷ் ரவுடிக்கு போன் செய்து மகாவை நீ கொல்லலயா என்று கேட்க அவன் நான் தான் கொன்னேன் என்று பணத்தை கேட்டு மிரட்ட இருவரும் குழப்பம் அடைகின்றனர். ஸ்டேஷனலில் ராமை போலீஸ் அதிகாரி ஒருவர் உங்க கடமையை சரியா செய்திருக்கீங்க என்று பாராட்ட சேது, துரை, சத்யன், சீதாவின் அப்பா ராஜசேகர் ஆகியோர் வந்து சீதா தப்பே பண்ணல என்று சொல்ல ஆதாரங்கள் எல்லாம் சீதாவுக்கு எதிராக தான் இருப்பதாக சொல்கிறான் ராம். 


சீதாவை ஜாமினில் வெளியே எடுப்போம் என்று சொல்ல ராம் ஒரு போதும் நான் அதை செய்ய விட மாட்டேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறான். ஜெயிலுக்குள் சீதா சாப்பிடாமல் இருக்க அந்த விஷயம் அறியும் ராம் உனக்காக இல்லனாலும் குழந்தைக்காக சாப்பிடு என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | ஹிந்தி படத்தில் வில்லனாக நடிக்கும் பிருத்விராஜ்! வெளியானது டீஸர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ