இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவால் காலமானார்!

இளையராஜாவின் மகள் பவதாரிணி சற்றுமுன் உடல் நலக்குறைவால் காலமானார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 25, 2024, 09:30 PM IST
  • இளையராஜாவின் மகள் பவதாரிணி சற்றுமுன் காலமானார்.
  • அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
  • இதற்கான சிகிச்சையில் அவர் இருந்தார்.
இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவால் காலமானார்! title=

இளையராஜாவின் மகள் பவதாரிணி சற்றுமுன் காலமானார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்றிருந்தார். அவர் இலங்கையில் காலமானதாக செய்திகள் வந்துள்ளன. அவருக்கு வயது 47. 

5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்தவர் இலங்கையில் சிகிச்சை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகின்றது. சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5:20 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.நாளை மாலை அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்படும். 

1984-ல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘திதிதே தாளம்’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து, ராசய்யா, அலெக்சாண்டர், தேடினேன் வந்தது, காதலுக்கு மரியாதை, அழகி, பிரண்ட்ஸ், தாமிரபரணி, உளியின் ஓசை, கோவா, மங்காத்தா, அனேகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடியுள்ளார்.ரேவதி இயக்கிய 'மித்ர் மை பிரண்ட்' படத்திற்கு பவதாரிணி இசையமைத்துள்ளார். ரேவதி இயக்கிய 'மித்ர் மை பிரண்ட்' படத்திற்கு பவதாரிணி இசையமைத்துள்ளார்.

தேசிய விருது

பவதாரிணி 'மயில் போல' பாடலுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்றுள்ளார். இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் இசையமைப்பில் பாடல்களை இவர் பாடியுள்ளார்.

bhavatharini

தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளிலும் அவர் பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

நீண்ட இடைவேளைக்குப்பின் 3 திரைப்படங்களுக்கு பவதாரிணி இசையமைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News