தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.


இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சீதா ராம் என இருவரும் வீட்டுக்குள் அந்த நிலையில் சேது சீதாவை முழுமையாக புரிந்து கொண்டார். 


சீதாவிடம் மன்னிப்பு கேட்ட சேது


இதைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் சீதா சேதுவுக்கு சாப்பாடு ஊட்டி சுத்தம் செய்து விட அவர் இதுவரைக்கும் உன்னை புரிஞ்சுக்காம உன்னை தப்பு தப்பா பேசிட்டு ரொம்ப கொடுமைப்படுத்திவிட்டு என்னை மன்னித்துவிடு என மன்னிப்பு கேட்க சீதா அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா என சொல்லி சந்தோஷப்படுகிறாள். பிறகு ராம் மற்றும் சீதா என இருவரும் சேர்ந்துவிடும் ஆசீர்வாதம் வாங்குகின்றனர். 


இதை நான் வெளியில் இருந்து பார்த்த மகா கோபப்பட்டு கையில் இருந்த பால் டம்ளரை போட்டு உடைக்கிறாள். சத்தம் கேட்டு வெளியே வந்த சீதா இப்படியே இருந்திங்கனா உங்க வாழ்க்கையும் இதே மாதிரி தான் உடைந்து போய்விடும். அப்புறம் எதையும் ஒட்ட வைக்க முடியாது என சொல்ல மகா எதுவும் பேச முடியாமல் அங்கே இருந்து சென்று விடுகிறாள். 


மகாவை ஏற்றிவிடும் அர்ச்சனா


பிறகு அர்ச்சனாவிடம் சும்மா விடக்கூடாது என கோபப்பட அவளும் மகாவை ஏற்றி விடுகிறாள். அதைத் தொடர்ந்து மகா என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு என சொல்கிறாள். அதாவது எல்லோரும் உட்கார்ந்து சாப்பிடும்போது மகா சீதா மற்றும் ராமின் அன்போடு உட்கார வைத்து சாப்பிட சொல்கிறாள். மீராவிடமும் செய்த தப்புக்காக மன்னிப்பு கேட்டு பாசமாக பேச சீதாவுக்கு ஏதோ சந்தேகம் வருகிறது. 



மேலும் படிக்க | அவசர அவசரமாக நீதிமன்றத்தை நாடிய லியோ படக்குழு! ஏன் தெரியுமா?


ஹைதராபாத் பிரான்ச் ரொம்ப நஷ்டத்துல போயிட்டு இருக்கு நீ அங்க போய் பிசினஸ் பார்த்துக்கணும் என்று சொல்ல சீதாவையும் கூட்டிட்டு போகணுமா என்று கேட்க இல்ல நீ மட்டும் போ சீதா இங்கே சேதுவை பார்த்து கேட்க வேண்டும் என சொல்கிறாள். ராம் எனக்கு இப்போ பிசினஸ் பண்ற ஐடியா இல்லை என சொல்ல மாட்டா பேசி பேசி அதனை ஊருக்கு செல்ல சம்மதிக்க வைக்கிறாள். 


ஷாக் கொடுக்கும் சீதா


சீதா இது தனக்கு போடும் ஸ்கெட்ச் என்பதை புரிந்து கொள்ள பிறகு மீரா சீதாவை அழைத்துச் சென்று மகா இப்படியெல்லாம் பேசுறது நம்பவே முடியல என சொல்ல அதெல்லாம் உங்க மேல இருக்க பாசத்துல நினைக்கிறீங்களா என கேட்டு ஷாக் கொடுக்கிறாள் சீதா. 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | பிரபல நடிகையை அழவைத்த ராஜ்கிரண்…! ஏன் தெரியுமா..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ