தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா சேதுவிடம் சென்று எல்லாரையும் கோவிலுக்கு அழைத்து வர சொன்ன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


கேள்வி மேல் கேள்வி கேட்கும் மகா, அர்ச்சனா


அதாவது, சேதுவும் சம்மதம் தெரிவித்து எல்லாரையும் கோவிலுக்கு கூப்பிட மகாவும் அர்ச்சனாவும் இப்போ எதுக்கு அந்த கோவிலுக்கு போகணும்னு சொல்றீங்க என்று கேள்வி மேல் கேள்வி கேட்க சேது நீங்க வரலைனா நான் சீதாவோட போறேன் என்று சொல்ல மகா அவங்க கூட போக வேண்டாம் என்று சொல்லி எல்லாரும் ஒன்றாக கோவிலுக்கு செல்கின்றனர். 



மேலும் படிக்க | ஜவான் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும்? வெளியானது தேதி!


ஏற்கனவே கோவிலுக்கு வந்த மூன்று பெண்களும் சாமியார் வேடத்தில் இருப்பது துரை தான் என்று தெரியாமல் அங்கு வந்து வேண்ட அவர் என்னமோ தப்பு பண்ணிட்டு வந்திருக்கீங்க, என்னனு சொல்லுங்க என கேட்க இவர்களுக்குள் இன்னும் பயம் அதிகமாகிறது. 


ராமின் தங்கைகளை மிரட்டும் துரை


கோவிலுக்கு வந்த மற்ற குடும்பத்தினர் சாமி கும்பிட்டு விட்டு சுற்றி வரும் போது மூன்று பெண்களும் அங்கிருப்பதை பார்த்து விடுகின்றனர், துரை என்ன தப்பு பண்ணீங்க, சொல்லுங்க என்று மிரட்டி கேட்க நாங்க வீட்டுக்கு தெரியாமல் பீர் குடிச்சிட்டு வந்து வீட்டில் பொய் சொல்லிட்டோம் என்று உண்மையை சொல்ல அதை கேட்டு மகா உட்பட எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | தளபதி 68 ஒரு டைம் ட்ராவல் படமா? வெளியான சுவாரஸ்ய தகவல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ