சீதா ராமன் அப்டேட்: மரண பயத்தை காட்டும் சீதா.. பைத்தியமாக புலம்பும் மகா
Seetha Raman Today`s Episode Update: ராம் கொடுத்த அதிர்ச்சி.. பைத்தியமாக புலம்பும் மகா - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்
தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.
சீதா ராமன் : இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராம் பேக்குடன் வெளியே வந்து சீதா இல்லாத இடத்தில எனக்கு என்ன வேலை என்று சொல்லி மகாவுக்கு ஷாக் கொடுத்தான்.
ராம் கூறியதை கேட்டு ஷாக் ஆன மகா
இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது ராம் சொன்னதை கேட்டு மகா அதிர்ச்சி அடைந்து நிற்க சீதா, மீரா, துரை என மூவரும் சந்தோசப்படுகின்றனர். சூப்பர் ராம் என பாராட்ட சீதா பாஸ் எனக்கு கால் வலிக்குது உள்ளே போலாமா வேணாமா கேளுங்க என்று சொல்ல மகா இன்னும் கடுப்பாகி உள்ளே சென்று விட இவர்கள் சந்தோசமாக வீட்டிற்குள் நுழைகின்றனர்.
ராமுக்கு நன்றி சொல்லும் சீதா
அடுத்ததாக சீதா ராமுக்கு தொடர்ந்து நன்றி சொல்லி கொண்டே இருக்க அவன் சீதா சொல்லும் தேங்க்ஸை எண்ணி கொண்டே இருக்கிறான். போதும் சீதா தூங்கலாம் என்று சொல்ல அவள் நீங்க பண்ணது பெரிய விஷயம் பாஸ், அதுக்காக உங்களுக்கு நைட் முழுக்க நன்றி சொன்னா கூட பத்தாது என்று சொல்கிறாள்.
பைத்தியம் போல் புலம்பும் மகா
மறுபக்கம் ரூமுக்குள் மகா சீதா என் கண்ட்ரோல்ல இல்ல, ராமும் கொஞ்சம் கொஞ்சமா அந்த சீதா பக்கம் போயிட்டே இருக்கான் என்று பைத்தியம் போல புலம்ப துரை இதை பார்த்து மெண்டல் ஆகிட்டா போல என்று நினைக்கிறார்.
மறுநாள் காலையில் மகா ஆபிஸ் கிளம்பிய நிலையில் சத்தியன் வீட்டிற்கு வர சீதா மற்றும் ராம் ஆகியோர் அவனை வரவேற்று உபசரிக்கின்றனர். இங்கே ஆபிசில் மகா லாயர் ஒருவரை வரவைத்து மேஜை முழுக்க பணத்தை கொட்டி நிரப்பி உடனடியா சேதுவையும் சுபாசையும் வெளியே எடுக்க வேண்டும் என்று சொல்கிறாள்.
லாயர் கண்டிப்பா எடுத்துடலாம் என்று சொல்ல துரை இதை பார்த்து ஷாக் ஆகிறார்.
கடுப்பாகி மகாவுக்கு போன் செய்யும் அர்ச்சனா
வீட்டில் சீதா தனது கையால் சமைத்து சத்யனை உபசரிக்க இதையெல்லாம் பார்த்து கடுப்பாகும் அர்ச்சனா மகாவுக்கு போன் செய்து சொல்ல அவள் நான் கிளம்பி வரேன் என்று சொல்லி வீட்டுக்கு கிளம்புகிறாள், அடுத்து சீதா உங்க கல்யாணத்துக்கு நானே துணி தைத்து தரேன் என்று இருவருக்கும் அளவெடுக்க அங்கு வரும் அர்ச்சனா நடக்காத கல்யாணத்துக்கு இதெல்லாம் தேவையா என்று நக்கல் அடிக்கிறாள்.
இதனால் அர்ச்சனா மற்றும் சீதாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட சீதா அர்ச்சனாவின் கழுத்தில் கத்தரி கோலை வைத்து மரண பயத்தை காட்டுகிறாள்.
காணத்தவறாதீர்கள்
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?
சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | திரைப்படமாக மாறுகிறது இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு..! ஹீரோ யார் தெரியுமா..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ