அஜித்குமார் தற்போது பயணம் மேற்கொண்டுள்ள நாடு எது தெரியுமா..? ஷாலினி பகிர்ந்த தகவல்..!

அஜித்தின் வெளிவராத புகைப்படங்களை பதிவிட்டு மகிழ்ந்த ஷாலினி..!  நடிகர் அஜித் குமார் பைக்கிலேய சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவை சுற்றிப்பார்த்தார். இதையடுத்து இவர் தற்போது உலக நாடுகளிலும் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார்.   

Written by - Yuvashree | Last Updated : Aug 2, 2023, 11:14 AM IST
  • நடிகர் அஜித்குமார் தற்போது உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
  • இது குறித்து ஷாலினி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
  • அதில் அஜித்தின் இதுவரை கண்டிராத புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
அஜித்குமார் தற்போது பயணம் மேற்கொண்டுள்ள நாடு எது தெரியுமா..? ஷாலினி பகிர்ந்த தகவல்..! title=

தமிழ் திரையுலகின் ரசிகர்களால் ‘தல’ என அன்பாக அழைக்கப்பட்டவர் அஜித்குமார். இவர், சில நாட்களுக்கு முன்னர் தன்னை தல என அழைக்கக்கூடாது என ரசிகர்களுக்கு கட்டளையிட்டதால் இவர் தற்போது ஏ.கே (அஜித் குமார்) என அழைக்கப்படுகிறார். இவர், சில மாதங்களுக்கு பைக்கிலேயே இந்தியாவை சுற்றி வந்தார். தற்போது அவர் உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 

அஜித்தின் தீராக்காதல்..!

திரை வாழ்க்கையை தனிப்பட்ட வாழ்க்கையுடன் கலக்காத நடிகர்களுள் ஒருவர் அஜித் குமார். அஜித்திற்கு ஆரம்பத்தில் இருந்தே பைக் ரைடிங் செல்வது, ரேசிங் செல்வது போன்ற பல விஷயங்களில் ஈடுபாடு காட்டி வந்தார். படங்களில் பைக்கை வைத்து ஸ்டண்ட் செய்யும் காட்சிகள் கொடுத்துவிட்டால் போதும் வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பி விடுவார். அந்த அளவிற்கு பைக்கின் மீதும் பயணத்தின் மீதும் காதல் கொண்டிருப்பவர் அஜித் குமார். இவர் நடிப்பில் இந்த வருடத்தின் தாெடக்கத்தில் ‘துணிவு’ படம் வெளியானது. இதையடுத்து அவர் ‘விடா முயற்சி’ படத்தில் நடிக்க இருக்கிறார். கிடைக்கும் தருவாயில் எல்லாம் தனக்கு பிடித்த செயல்களை செய்யும் அஜித், சில மாதங்களுக்கு முன்பிருந்து பைக் பயணத்தில் ஈடுபட ஆரம்பித்தார். 

பல நாடுகளை சுற்றிய அஜித்..

அஜித் தன் குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். லண்டன், இத்தாலி போன்ற நாடுகளுக்கு குடும்பத்தினரை அழைத்து சென்ற அவர், அங்கே தனக்கு பிடித்தமான பைக் பயணத்திலும் ஈடுபடுவதுண்டு. தற்போது அவர் ஜெர்மனி, நார்வே, டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகளில் பயணத்தை முடித்துள்ளார். 

மேலும் படிக்க | திரைப்படமாக மாறுகிறது இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு..! ஹீரோ யார் தெரியுமா..?

ஷாலினியின் பதிவு..!

நடிகை ஷாலினி, கணவரின் பயணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “ஜெர்மனி, நார்வே, டென்மார்க் ஆகியவற்றை கடந்து வந்துள்ளீர்கள்..இப்படியே இந்த பயணம் தொடர வேண்டும்..” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுவரை வெளிவராத அஜித்தின் புகைப்படங்களையும் ஷாலினி பகிர்ந்துள்ளார். இதையடுத்து, இந்த போட்டோக்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். 

விடாமுயற்சி அப்டேட் கேட்கும் ரசிகர்கள்..!

அஜித் அடுத்த நடிக்கவுள்ள ‘விடாமுயற்சி’ படத்தை பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் மற்றும் முதற்கட்ட பணிகள் கடந்த மாதமே (ஜூலை) தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அஜித் குமார் தனது பயணத்தில் பிசியாக இருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுவரை படத்தின் டைட்டிலும் அதற்கான போஸ்டரும் மட்டுமே வெளிவந்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் அனைவரும் அடுத்த அபட்டேட்டிற்காக காத்துக்கொண்டுள்ளனர். 

ஒரு வருடத்திற்கு ஒரு படம்தான்..!

அஜித்குமார் கடந்த சில ஆண்டுகளாக ஸ்ட்ரிக்ட் ஆன பாலிஸி ஒன்றை வைத்துள்ளார். அது, ஒரு ஆண்டில் ஒரு படத்தில் நடிப்பது என்பதுதான். இதற்கு, அவர் தனது காதல் மனைவி ஷாலினிக்கு செய்து கொடுத்துள்ள சத்தியம்தான் என கூறப்படுகிறது. ஷாலினியுடன் திருமண வாழ்க்கையில் இணைந்த போது, தான் சினிமாவில் ஒரு உயரத்தை அடைந்து விட்டால் ஒரு வருடத்தில் ஒரு படம்தான் நடிப்பேன், பிற நேரங்களை குடும்பத்துடன் செலவிடுவேன் என அவர் கூறியதாக கூறப்படுகிறது. 

அஜித்தின் வைரல் வீடியோ:

நடிகர் அஜித்தும் ஷாலினியும் காரில் Long Drive சென்றுக்கொண்டிருப்பதாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் சில நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்த அந்த வீடியோவில் அஜித் கார் ஓட்டிக்கொண்டிருப்பதும், காரில் ஒரு பாட்டு ஓடிக்கொண்டிருப்பதும் பதிவாகியிருந்தது. அஜித் நடித்து 1994ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம், ‘பவித்ரா’. இந்த படத்தில் ராதிகா, நாசர், லூஸ் மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் “உயிரும் நீயே உலகமும் நீயே..” என்ற பாடல் இடம் பெற்றிருக்ககும். இதை உன்னிகிருஷ்ணன் பாடியிருந்தார். இந்த பாடலை, தனது காரில் ஓடவிட்டபடி ஷாலினியுடன் பயணம் செய்துள்ளார் அஜித். “நெடுந்தூர பயணத்தின் போது அவர் ரசிக்கும் பாடல்..” என்ற கேப்ஷனுடன் ஷாலினி அந்த வீடியோவை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவும் பாடலும் ரசிகர்களிடையே பயங்கர வைரலானது. 

மேலும் படிக்க | சமந்தாவிற்கு ஜோடியாக நடிக்கும் சந்தானம்..? ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ நாயகன் சொன்ன சூப்பர் தகவல்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News