தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாலினி கேமரா முன்னாடி அப்படியே மாற்றி பேசினாள். 


நக்கலடித்துவிட்டு செல்லும் மாலினி


இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது, அதாவது, மகா அவளை விட்டுடுங்க, இல்லையாட்டி நான் டிஎஸ்பியிடம் பேசுவேன் என்று சொல்ல மாலினி இப்போ நான் கிளம்பலாமா என் போனை குடுங்க என்று கெத்தாக வெளியே கிளம்ப ராஜசேகர் உன்னை கண்டிப்பா ஜெயிலில் போடுவேன் என்று சொல்ல அதை அப்பறம் பாக்கலாம் என்று நக்கலடித்து விட்டு செல்கிறாள். 


சீதாவுக்கு எதிராக மாறும் மதுமிதா


இங்கே மகா மதுமிதாவிடம் சீதா ஊருக்கு போய் மாலினியை எனக்கு எதிராக பேச சொல்லி வாக்குமூலம் வாங்க முயற்சி செய்திருக்கா, நீ வேணும்னா மாலினியிடம் கேளு என்று சொல்ல மதுவும் போன் செய்ய மாலினி ஆமாம் என்று சொல்கிறாள். இதனால் மது மொத்தமாக சீதாவுக்கு எதிராக மாறுகிறாள்.



அதோடு நிறுத்தாமல் ராம் வந்ததும் மகா கண்ணீர் விட்டு சீதா தனக்கு எதிராக மாலினியை வைத்து இப்படியெல்லாம் பிளான் பண்றா, அவளும் உன்னை நல்லா யூஸ் பண்ணிக்கறா, இது இப்படியே போனால் நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என சொல்ல ராம் அதிர்ச்சி அடைகிறான்.



மேலும் படிக்க | மன்னனாக மகுடம் சூடினாரா மாரி செல்வராஜ்? மாமன்னன் திரைவிமர்சனம்!


உச்சகட்ட கோபத்துக்கு செல்லும் ராம்


உடனே சேதுபதி மகா இல்லனா நானும் இந்த வீட்டை விட்டு போய்டுவேன் என்று சொல்ல அர்ச்சனா, தங்கைகள் என எல்லாரும் நாங்களும் இந்த வீட்டுல இருக்க மாட்டோம் என்று சொல்ல ராம் உச்சகட்ட கோபத்துக்கு செல்கிறான். பிறகு சீதாவும் மீராவும் வீட்டுக்கு வர அவளை தடுத்து நிறுத்தும் ராம், நீ என்கிட்டே பொய் சொல்லிட்டு போய் இருக்க, என்னுடைய அன்பை பயன்படுத்தி என் சித்தியை பழி வாங்க பாக்குற, இனிமே உன்னோட வாழ முடியாது வெளியே போ என சீதாவை வெளியே துரத்துகிறான். 


மேலும் படிக்க | ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன்..! படத்தின் பெயர் என்ன தெரியுமா?


மீண்டும் வீட்டின் வெளியே கண்ணீருடன் நிற்கும் சீதா


இதனால் சீதா கல்யாணமாகி முதல் நாள் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்ததை போல மீண்டும் வெளியே கண்ணீருடன் நிற்கிறாள். 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | இந்தியன் 3 திரைப்படம் தயாராகுமா? உதயநிதி ஸ்டாலின் சொன்ன அருமையான தகவல்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ