ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன்..! படத்தின் பெயர் என்ன தெரியுமா?

Ttf Vasan New Movie: யூடியூப் தளத்தில் பிரபலமான பைக் ரைடராக வலம் வரும் டிடிஎஃப் வாசன் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.  

Written by - Yuvashree | Last Updated : Jun 29, 2023, 10:40 AM IST
  • யூடியூப் தளத்தில் பிரபலமான பைக் ரைடராக வலம் வருபவர், டிடிஎஃப் வாசன்.
  • இன்று அவருக்கு பிறந்தநாள்.
  • ஒரு படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன்..! படத்தின் பெயர் என்ன தெரியுமா? title=

நடிகர்களைப்போல யூடியூப் வாசிகளும் பிரபலங்களாக வலம் வருவது கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாகி வருகிறது. அப்படி பிரபலமான யூடியூப் செலிப்ரிட்டிகளுள் ஒருவர், டிடிஎஃப் வாசன். இவர், அதிவேகமாகவும் வித்தியாசமாகவும் பைக் ஓட்டி அதை வீடியோவாக யூடியூப் தளத்தில் வெளியிட்டு வைரலானவர். 

யூடியூப் பிரபலம்..

டிடிஎஃப் வாசன், கடந்த சில வருடங்களாகவே யூடியூப் தளத்தில் பைக் ஓட்டு வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். அதிவேகமாக பைக் ஓட்டுவது, பைக் ஓட்டிக்கொண்டே சாகசம் செய்வது என இல்லாத சேட்டைகளை செய்வதில் கெட்டிக்காரர் இவர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே சமூக வலைதளங்களில் உள்ளது. தனியாக யூடியூப் சேனல் நடத்தி வரும் இவர், தற்போது வரை சுமார் 35 லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ்களை சம்பாதித்துள்ளார். இவர் அடிக்கடி சாலை விதிகளை மீறுவதாக கூறி போலீஸார் இவர் மீது நடவடிக்கை எடுப்பதுண்டு. 

மேலும் படிக்க | Kamal Haasan: இயக்குநர் ஷங்கருக்கு ஆசையாக பெரிய பரிசு கொடுத்த கமல்..! என்ன காரணம்..?

போலீஸாரின் நடவடிக்கைகளுக்கு உள்ளானவர்..

டிடிஎஃப் வாசனிற்கு அதிகமாக 2கே கிட்ஸ்தான் ரசிகர்களாக உள்ளனர். இவர், பாதுகாப்பான முறையில் வாகனங்களை ஓட்டி வருகிறார் என்றாலும் பல இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் தவறான வழிமுறைகளை கற்றுத்தருவதாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர். இவர், சாலை விதிகளை மீறியதாக கூறி பலமுறை போலீஸில் சிக்கியவர். ஆனாலும் அடங்காமல் இவரும் பைக் ஓட்டி வருகிறார், போலீஸாரும் ஓயாமல் இவர் மீது நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். 

ஹீரோவாக அறிமுகம்..

டிடிஎஃப் வாசன் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் என சமூக வலைதளங்களில் ஏற்கனவே தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில், அவரது பிறந்தநாளான இன்று ஒரு ஸ்பெஷலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் டிடிஎஃப் வாசனின் புதிய படம் குறித்தும் அந்த படத்தின் பெயர் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளன. 

“299கி.மீ வேகத்தில் படப்பிடிப்பு ஆரம்பம்..”

டிடிஎஃப் வாசன் நடிக்கும் இந்த படத்திற்கு “மஞ்சள் வீரன்” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை செல்லம் என்பவர் டைரக்டு செய்கிறார். டிடிஎஃப் வாசனின் ட்ரேட் மார்க்கான வேகத்தை வைத்து “299 கிமி வேகத்தில் படப்பிடிப்பு ஆரம்பம்..” என அப்படக்குழு போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது. 

ரசிகர்கள் கொண்டாட்டம்..

டிடிஎஃப் வாசனை பெரிய திரையில் பெரிதாக யாருக்கும் தெரியாது என்றாலும் இவர் சமூக வலைதளங்களிலும் டிஜிட்டல் ஊடங்களில் மிகப்பெரிய பிரபலமாக வலம் வருகிறார். இவரைப்போலவே இன்னொரு யூடியூப் பிரபலம், ஐயப்பன் ராமசாமி. இவர் பலரை கோக்கு மாக்கான கேள்விகள் கேட்டு அவர்களை நேர்காணல் எடுத்து பிரபலமானவர். டிடிஎஃப் வாசனை ஐயப்பன் ராமசாமி  எடுத்த நேர்காணல் வைரலாகி மிகப்பெரிய மீம் மெட்டீரியலாக மாறியது. தற்போது சர்ச்சையில் இருந்து கொஞ்சம் விலகியிருக்கும் டிடிஎஃப் வாசன் படத்தில் நடிக்க உள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதனை அவர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

மேலும் படிக்க | மாரி செல்வராஜின் சம்பவமா? மாரி செல்வராஜிற்கு சம்பவமா? ‘மாமன்னன்’ ட்விட்டர் விமர்சனம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News