தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்ட மதுமிதா மயங்கி விழுவதை வீடியோ காலில் ராமும் சீதாவும் பார்த்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


மருத்துவமனையில் அட்மிட் ஆகும் மதுமிதா


அதாவது, வீட்டுக்கு வரும் ராமும் சீதாவும் மதுமிதாவை காரில் ஏற்றி கொண்டு ஹாஸ்ப்பிடலில் அட்மிட் செய்கிறார்கள்.



மதுவை பரிசோதனை செய்த டாக்டர் ஒன்னு ரெண்டு இல்ல கிட்டத்தட்ட 100 மாத்திரை சாப்பிட்டு இருக்காங்க, அதனால் மதுவை காப்பாற்றுவது கஷ்டம் தான் என்று சொல்ல சீதா அதிர்ச்சி அடைகிறாள். 



காளியாக மாறி மிரட்டும் சீதா


இதனையடுத்து ஹாஸ்பிடலுக்கு அர்ச்சனா, சுபாஷ் மற்றும் சேது ஆகியோர் வர அவர்களை சீதா தடுத்து நிறுத்தி நீங்க உள்ள போக கூடாது என சத்தம் போட இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் உள்ளே போக முயற்சி செய்கின்றனர். இதனால் சீதா கையில் கிடைக்கும் பொருளை எடுத்து காளியாக மாறி உங்களை இங்கேயே கொன்னுடுவேன் என மிரட்ட அவர்கள் வேறு வழியாக டாக்டரை சென்று சந்திக்கின்றனர். 



மேலும் படிக்க | இதற்காகத்தான் உடல் எடையை ஏற்றினாரா சிவகார்த்திகேயன்? SK21 அப்டேட்!


மதுமிதா எங்க வீட்டு மருமகள், எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்ல, அவளை காப்பாத்துங்க என்று சொல்லி டாக்ட்டரிடம் பேசி விட்டு வெளியே வந்து சீதாவை சந்தித்து நாங்க டாக்டரை பார்த்து பேசிட்டோம், இனிமே நீ தான் உள்ள போக முடியாது என ஷாக் கொடுக்க சீதா அவர்களிடம் சத்தம் போட டாக்டர் வெளியே வந்து இது ஹாஸ்பிடல் என திட்டுகிறார். 


உயிர் பிழைக்கும் மதுமிதா


அதன் பிறகு ராமும் சீதாவை திட்ட சீதா எதுவும் செய்ய முடியாமல் அமைதியாகிறாள். அதன் பிறகு ஒரு வழியாக மதுமிதா உயிர் பிழைக்க சீதாவை தவிர எல்லாரும் அவளை சந்திக்க செல்கின்றனர். அப்போது அவள் சீதா பற்றி கேட்க அவள் வெளியே உட்கார்ந்து அழுது கொண்டிருப்பதாக சொல்கின்றனர். மேலும் ராம் தான் உன்னை காப்பாற்றியதாக ஓவர் பில்ட்டப் கொடுக்கின்றனர்.


மேலும் படிக்க | வைரமுத்து போல குழந்தைகள் இல்லாதது ஏன்? இப்படிக்கூடவா கேட்பாங்க! கடுப்பான சின்மயி!


மதுமிதாவை காணப்போகும் சீதா


இதையடுத்து சீதா மதுமிதாவை பார்க்க போக டாக்டர் உங்களை உள்ளே விட கூடாதுனு சொல்லி இருப்பதாக தடுத்து நிறுத்துகின்றனர். 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | Adipurush: ‘இந்த படம் எனக்கு அடிச்ச லக்..’ ஆதிபுருஷ் படவிழாவில் நடிகர் பிரபாஸ் பேச்சு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ