Chinmayi Sripada News: பாடகி சின்மயி வெளியிட்டுள்ள இன்ஸ்டா ஸ்டோரியில் வைரமுத்து ரசிகர்களால் தான் பட்ட மோசமான சில நிகழ்வுகளை எழுதியுள்ளார். அவரது குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் சிலர் அபத்தமாக பேசுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை மீடு மூலம் முன்வைத்தார் பாடகி சின்மயி. இது மிகப்பெரிய சர்ச்சையானது. வைரமுத்து ஆதரவாளர்கள் சின்மயியை தரக்குறைவாக வசைபாடினார்கள். அதே நேரம் தொடர்ந்து தனது இன்ஸ்டாவில் வைரமுத்து குறித்து பல குற்றச்சாட்டுகளை சின்மயி அவ்வப்போது எழுப்பி வருகிறார். இப்போது வைரமுத்துவின் ஆதரவாளர்கள் குறித்து பதிவிட்டுள்ளார்.
பாடகி சின்மயி நடிகர் ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டு அவருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். இவர் கர்ப்பமாக இருக்கும் போது அந்த தகவலை வெளியிடவில்லை. அதோடு குழந்தை பிறந்த பிறகு தான் அவர் தாய் ஆனதை அறிவித்தார். அதற்கு பலரும் நயந்தாரா போல வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டீர்களா என கேள்வி எழுப்பினர். உடனே வயிற்றில் குழந்தையுடன் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார். தனது கர்ப்ப காலத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என அவர் கூறி இருந்தார்.
இந்நிலையில், அவரது இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிடுமாறு அவரது ரசிகர்கள் சிலர் அவரிடம் தொடர்ந்து கேட்டு வந்தனர். அதற்கு பதில் அளிக்கும் வகையில், நான் ஏற்கனவே பலரது வெறுப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. இதில் என் குழந்தைகளுக்கு அந்த வெறுப்பு தொடர்வதை விரும்பவில்லை. என் குழந்தைகள் பிறந்தது முதல் பலரும் வைரமும் முத்தும் பிறந்துவிட்டதாக அசிங்கமாக பேசுகின்றனர். அதோடு வைரமுத்து உங்களை பாலியல் சீண்டல் செய்திருந்தால் ஏன் உங்கள் குழந்தை வைரமுத்து போல் இல்லை என்று கேட்கிறார்கள், இந்த தமிழ் கலாச்சார தோழி மற்றும் தோழர்கள் குறித்து எனக்கு தெரியும் என காட்டமாக இன்ஸ்டாவில் எழுதியுள்ளார்.
வைரமுத்து போல குழந்தைகள் ஏன் இல்லை என்று சிலர் கேட்பதாக சின்மயி தெரிவித்துள்ளார். இதனையடுத்து சின்மயிக்கு ஆதரவாக பலரும் இதற்கெல்லாம் அஞ்சாமல் தொடர்ந்து உங்கள் வாழ்க்கையில் முன்னேறுங்கள் என ஆதரவை கமெண்ட் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க - திரைப்படமாகும் வைரமுத்துவின் இந்த அற்புத நாவல்..வாவ் இவர்தான் ஹீரோவா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ