தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலில் மதுமிதா ராம் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட சீதா சாப்பாட்டை எடுத்துக் கொண்டு கீழே சென்று உட்கார மதுமிதாவுக்கு சந்தேகம் வந்தது. 


திட்டம் போடு மகாலட்சுமி


இதைத்தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது மதுமிதா சீதா எதுக்கு கீழே உட்கார்ந்துகொண்டு இருக்கிறா என்று யோசிக்க இந்த சந்தர்ப்பத்தையும் மகாலட்சுமி தனக்கு சாதகமாக பயன்படுத்த திட்டம் போடுகிறாள். 


நீ ராம் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடுவதால் தான் சீதா இப்படி செய்கிறாள் என்று சொல்ல மதுமிதா கோவமாகிறாள். அதோட நீ இந்த வீட்டுக்கு வந்ததுனால சீதா எப்படி எல்லாம் நடந்துக்கிறாள் என்று நீயே பாரு என கொளுத்திப்போட துரை சீதா கீழே உட்கார்ந்து சாப்பிடுவதற்கான காரணத்தை சொல்ல வர மகாலட்சுமி அவனை தடுத்து நிறுத்துகிறாள். 


சீதாவிடம் எமோஷனலாக பேசும் மதுமிதா


பிறகு சீதா எதுவும் பேசாமல் எழுந்து சென்றுவிட மதுமிதாவும் வருத்தத்தோடு எழுந்து செல்கிறாள். அதன் பிறகு மது சீதாவிடம் இதுதான் உன்னுடைய உண்மையான குணமா இது தெரியாம இவ்வளவு நாளா நான் உன் கூட பழகி இருக்கேன், அப்பா அம்மாவை கூட நான் புரிஞ்சுக்கல எல்லாரும் என்னை ஏமாத்திட்டு இருந்து இருக்கீங்க என எமோஷனலாக பேச சீதா அது தான் உண்மை இது எல்லாம் இவங்க நடத்துற பொய் நாடகம் என்று சொல்ல மதுமிதா அதை நம்ப மறுக்கிறாள். 



நான் என் அக்காவோட வாழ்க்கையை கெடுப்பேனா?  கேள்வி கேட்கும் சீதா


பிறகு சீதா ரூமுக்கு வந்து ராமிடம் நான் என் அக்காவோட வாழ்க்கையை கெடுப்பேனா? நான் கஞ்சா வச்சேனு நீங்க நம்பறீங்களா என கேள்வி கேட்டு அழுது புலம்ப ராம் எதையும் பேசாமல் அமைதியாக படுத்து தூங்கி விடுகிறான். இன்னொரு பக்கம் சீதா இரவெல்லாம் அழுது கொண்டே இருக்கிறாள். 



மேலும் படிக்க | இயக்குநர் டூ நடிகர்..கதையின் மூலம் கே.எஸ் ரவிகுமார் கம்-பேக் கொடுப்பது எப்போது..?


மறுநாள் காலையில் சீதா ராமின் அம்மாவின் கல்லறைக்கு சென்று இங்கே எல்லாம் தப்பா நடக்குது எனக்கு நீங்கதான் உதவி செய்யணும் என்று வேண்டிக் கொண்டிருக்க அப்போது ராம் மற்றும் மதுமிதா அந்த கல்லறைக்கு வர சீதா ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறாள். 



சீதாவின் மீது இருக்கும் காதலை வெளிப்படுத்தும் ராம்


அங்கு வரும் ராம் இது என் அம்மாவோட கல்லரை. சீதா வந்த பிறகு அவ மூலமா நான் என் அம்மாவை பார்க்க ஆரம்பிச்சேன். அவ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது என சீதாவின் மீது இருக்கும் காதலை வெளிப்படுத்துகிறான், மேலும் சீதா இப்படி செஞ்சிருக்க மாட்டா என பேச மதுமிதாவும் சீதா நல்லவள் தான் என பேசுகிறாள். இதை மறைந்திருந்து பார்க்கும் சீதா கண்ணீருடன் எனக்கு இது போதும் பாஸ், ஐ லவ் யூ பாஸ் என உருகுகிறாள். 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | இயக்குநர் டூ நடிகர்..கதையின் மூலம் கே.எஸ் ரவிகுமார் கம்-பேக் கொடுப்பது எப்போது..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ