சீதா ராமன் அப்டேட்: மீண்டும் ஒரு ராமாயணம்? சீதாவை சிறைக்கு அனுப்பும் ராம்?
Seetha Raman Today`s Episode Update: கைதாகும் சீதா? ராம் எடுக்கும் முடிவு என்ன? சீதாராமன் இன்றைய எபிசோட் அப்டேட்
தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.
சீதா ராமன் : இன்றைய எபிசோட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சூர்யா சீதா கொண்டு வந்த பேக்கில் தான் கஞ்சா இருந்ததாக சொல்ல அதைக் கேட்டு ராம், மதுமிதா அதிர்ச்சி அடைந்தனர்.
ராஜசேகரிடம் மகாலட்சுமி ஆவேசம்
இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது மகாலட்சுமியின் வீட்டுக்கு வரும் ராஜசேகர் மகாலட்சுமியிடம் சத்தம் போட அவள் சீதா எல்லாத்தையும் சொல்லிட்டாளா அதுவும் நல்லதுக்கு தான் என ஆவேசமாக பேசுகிறாள்.
நீங்கள் எங்களை ஏமாற்றினீர்கள்: சாடும் மகா
மேலும் முதல்ல தப்பு பண்ணது நீங்கதான், நாங்க மதுமிதாவை பொண்ணு கேட்டு தான் வந்தோம் ஆனா நீங்க எங்களை ஏமாற்றி சீதாவை கட்டி வச்சுட்டீங்க என சத்தம் போடுகிறாள். சீதா இனிமேல் நீ இங்க இருக்க வேணாம், இவங்க எல்லாரும் கெட்டவங்க என சொல்லி அவர் வீட்டுக்கு அழைக்க சீதா வர மறுக்கிறாள்.
கோபப்படும் மதுமிதா
பிறகு ராஜசேகர் சீதா நீங்க நினைக்கிற மாதிரி இல்லை, உங்களால எதுவும் செய்ய முடியாது என சவால் விட்டு வீட்டை விட்டு வெளியே கிளம்ப எதிரில் ராம் மற்றும் மதுமிதா வருகின்றனர்.
ராஜசேகர் திரும்பவும் மதுமிதாவிடம் தன்னுடன் வந்துவிடுமாறு சொல்ல அவள் பயங்கரமாக கோபப்படுகிறாள்.
மேலும் படிக்க | சகோதர பாசம் என்றாலே பாசமலர்தான்..62 ஆண்டுகளை கடந்த அழகு காவியம்..!
ராஜசேகரை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் ராம்
நீங்க சொன்னா மாதிரியே சீதா மூலமாக கஞ்சாவை வச்சு அவர ஜெயில்ல போட்டுட்டீங்க என கோபப்பட ராஜசேகர் அதிர்ச்சி அடைகிறார்.
சீதா கொண்டு வந்த பையில் தான் கஞ்சா இருந்ததாக சூர்யா சொன்னதாக ராம் சொல்ல அது சீதா வச்சது கிடையாது, உங்க சித்தி மகா வச்சது என சொல்ல ராம் கோபப்பட்டு அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறான்.
சீதாவிடம் கோபம் காட்டும் ராம்
அதே கோபத்தோடு வீட்டுக்கு வரும் ராம் சீதாவுடன் பேசிக் கொண்டிருக்கும் மீராவை வெளியே அனுப்பிவிட்டு அவளிடம் கோபத்தைக் காட்டி ரூமில் இருக்கும் பொருட்களை எடுத்து உடைக்கிறான்.
என்னை போலீஸ்ல பிடிச்சு கொடுங்க: சீதா
இதனால் இன்னும் உடைந்து போகும் சீதா நான் அப்படி செஞ்சி இருப்பேன்னு நீங்க நினைக்கிறீங்களா பாஸ்? நானே எப்படி என் அக்கா வாழ்க்கையை கெடுப்பேன்? உங்களுக்கு நான் தான் செய்தேனு சந்தேகம் இருந்தால் என்னை போலீஸ்ல பிடிச்சு கொடுங்க என சீதா அழுது புலம்புகிறாள்.
காணத்தவறாதீர்கள்
பிறகு ராம் கோபமாக மகாவிடம் சென்று போலீசை கூப்பிட சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?
சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | இந்த 5 கொரியன் ஆக்சன் திரில்லர் படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ