இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளம்ங்களுள் ஒன்றான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இயக்குநர் ஶ்ரீதர்.K இயக்கத்தில், தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஒரிஜினல் வெப் சீரிஸான  “பாராசூட்” சீரிஸை அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாராசூட் தொடர்: 


நடிகர் கிருஷ்ணா தயாரிப்பு நிறுவனமான ட்ரைபல் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளது. நடிகர் கிருஷ்ணா டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்காக தயாரிக்கும் இரண்டாவது சீரிஸ் இதுவாகும்.


பல சூப்பர்ஹிட் படங்களில் ரொமான்டிக் ஹீரோவாக கலக்கிய நடிகர் ஷாம், பன்முக திறமை கொண்ட நடிகர் கிஷோர் மற்றும் நடிகை கனி ஆகியோர் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்கின்றனர்.  இந்த மூவருடன், திறமைவாய்ந்த குழந்தை நட்சத்திரங்களான சக்தி மற்றும் இயல் இணைந்து நடிக்கிறார்கள். 


மேலும் படிக்க | டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியீடு..! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது..?


இவர்களுடன், பிரபல நடிகர்கள் VTV கணேஷ், பாவா செல்லதுரை ஆகியாேரும் நடிக்கின்றனர். இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸுக்கு ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்ய, ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்கிறார்.  கலை இயக்குநராக ரெமியன் பணியாற்ற, டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை அமைக்கவுள்ளார்.


நடிகர் ஷ்யாம்:


90ஸ் குழந்தைகளுக்கு பிடித்த ஹீரோக்களுள் ஒருவர், ஷ்யாம். தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களாக விளங்கும் அஜித் மற்றும் விஜய் ஆகியோருக்கு இணையாக  தனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கையின் போது நடித்து வந்தவர், ஷ்யாம். குஷி படத்தில் துணை கதாப்பாத்திரமாக நடித்து தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். தொடர்ந்து 12 பி, ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, லேசா லேசா போன்ற பல ஹிட் படங்களில் நடித்தார். அந்த படங்ளும் சூப்பர் ஹிட் அடித்தன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு இரண்டாவது அண்ணனாக நடித்திருந்தார். 23 ஆண்டுகளுக்கு பிறகு அவர் விஜய்யுடன் இணைந்து நடித்த படம் இது. தற்போது பல நடிகர்கள் படங்களில் நடித்து கொண்டு அவ்வப்போது வெப் தொடர்களிலும் நடித்து வருகின்றனர். அது போல நடிகர் ஷ்யாமுத் ‘பாராசூட்’ தொடர் மூலம் சீரிஸ் நாயகனாக மாறுகிறார். 


குக் வித் கோமாளி கனி:


தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது, ‘குக் வித் கோமாளி’. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வெற்றியாளர் பட்டத்தை வென்றவர் கனி. இவர், பிரபல இயக்குநர் திருவின் மனைவி. கனி, கதை கூறுவதில் வல்லவர். சமீப காலமாக சில நேர்காணல் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். தற்போது அவரும் ‘பாராசூட்’ தொடர் மூலம் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார்.


மேலும் படிக்க | தூக்கிட்ட நிலையில் இளம் நடிகை மரணம்..! கொலையா? தற்கொலையா? ரசிகர்கள் அதிர்ச்சி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ