பிரபாஸின் சாஹூ படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் ஷ்ரத்தா கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

UV கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் இணைந்து தயாரிக்க சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் - ஸ்ரத்தா கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம் "சாஹூ". ரசிகர்கள் இதுவரை காணாத வித்தியாச தோற்றத்தில் பிரபாஸ் "சாஹூ" படத்தில் நடித்துள்ளார். இவருடன் நடிகர் அருண் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். 


திரைப்படத்துறையின் மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களான சாபு சிரில் கலை இயக்குனராக, ஒளிப்பதிவை மதி ஏற்றுக்கொள்ள, திரைப்படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.150 கோடிகளாகும்.


இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் இளம் நாயகி ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, ஈவ்லின் ஷர்மா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சாஹூ திரைப்படம் ஆகஸ்ட் 15, 2019 அன்று வெளிவரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் ஷ்ரத்தா கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.