தமிழ் திரையுலகில், சில படங்களையே இயக்கியிருந்தாலும் ரசிகர்கள் பலரது மனங்களில் இடம் பிடித்துவிட்டவர் அட்லீ. இவர், ராஜா ராணி படத்தை இயக்கி அறிமுகமானார். அதற்கு முன்னர் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்தார். அடுத்து நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார். இந்த நிலையில், அவர் ‘ஜவான்’ படம் மூலம் பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜவான் திரைப்படம்..


‘பாலிவுட் பாட்ஷா’ என்று அழைக்கப்படும் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கியுள்ள படம் ஜவான். இந்த படம் இன்று (செப்., 7) வெளியாகியுள்ளது. இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, தீபிகா படுகோன், சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிகில் படத்திற்கு பிறகு அட்லீ இயக்கும் படம் இது. இதனால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் எதிர்பார்ப்பு இருந்தது. அது மட்டுமன்றி, ஜவான் படத்தில் தமிழ் படைப்பாளிகள் பலர் வேலை செய்துள்ளனர். அதனாலும் ரசிகர்களை இதனை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். 


மேலும் படிக்க | பாலிவுட்டிலும் ஜெயித்தாரா அட்லீ..? ஜவான் படம் எப்படி..? முழு விமர்சனம் இதோ!


அட்லீ சம்பள விவரம்..


ஜவான் படத்தை ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. இந்த படத்தை இயக்க அட்லீ வாங்கிய சம்பள விவரம் வெளிவந்துள்ளது. அட்லீ ஒரு படத்திற்கு 52 கோடி சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது. அதற்கேற்றார் போல தான் இயக்கும் படங்களை ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆக்குவதையும் தன் கடமையாக்கி கொள்வார். ஜவான் படத்தை இயக்குவதற்காக இவரது சம்பளத்தை குறைத்துக்கொள்ளுமாறு பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. 52 கோடியாக இருக்கும் இவரது சம்பளத்தை 30 கோடியாக குறைத்துக்கொள்ளுமாறு கேட்கப்பட்டதாம். ஆனால் அட்லீ விடாப்பிடியாக தனது உண்மையான சம்பள தொகையில் நின்றதால் அவருக்கு அவர் கேட்ட தொகையே சம்பளமாக அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 


அட்லீயின் சொத்து விவரம்..


இயக்குநர் அட்லீ ஷங்கரின் எந்திரன் மற்றும் நண்பன் ஆகிய படங்களில் அவருக்கு உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். அப்போதிருந்தே பல நடிகர்கள் இவரது திறமையை கண்காணித்து வந்துள்ளனர். அதனாலேயே இவருக்கு அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 41 கோடியை தாண்டியிருக்கலாம் என கூறப்படுகிறது. 


ஜவான் படம் எப்படி…? 


ஜவான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளதை அடுத்து இந்த படம் குறித்த விமர்சனங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. படத்தின் முதல் பாதி நன்றாக இருபப்பதாகவும் அடுத்த பாதியில் ஒன்றும் பெரிதாக இல்லை எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 


மேலும், நயன்தாராவிற்கு படத்தில் வேலையே இல்லை என்றும் இவரை பிகில் படத்தில் அட்லீ எப்படி உபயோகித்து கொண்டாரோ அதே போல இதிலும் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், ஷாருக்கான் அப்பா-மகன் என இரண்டு வேடங்களிலும் நன்றாக நடித்துள்ளதாக ரசிகர்களுக்கு பாராட்டுகள் கிடைத்துள்ளது. தீபிகா படுகோன் சிறிது நேரம் வந்தாலும் கொடுத்த கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்து கொடுத்திருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். 


மேலும் படிக்க | ‘சூர்யா 43’ படத்தின் நாயகி இவரா..? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ