Shaktimaan: 90’s குழந்தைகளுக்கு ஜாக்பாட்..மீண்டும் வருகிறார் சக்திமான்..ஹீரோ யார் தெரியுமா?
Shaktimaan Movie: 90`s குழந்தைகளிடையே மிகவும் பிரபலமான தொடராக இருந்த சக்திமான் தொடர், விரைவில் படமாக உருவாகவுள்ளது. அதுவும் பெரிய பட்ஜெட் தொகையில் இப்படத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
90’ஸ் கிட்ஸ்களின் சூப்பர் ஹீரோ சக்திமான் மீண்டும் மிரட்ட வருகிறார். சக்திமான் தொடருக்கு ரசிகர்களிடையே இன்றளவும் மவுசு குறைந்தபாடில்லை. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊருக்கு ஊரடங்கு போடப்பட்ட சமயத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அப்போது ஒரு தொலைக்காட்சியில் ‘சக்திமான்’ தொடர் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. மறு ஒளிபரப்பிலும் டி.ஆர்.பி.யில் கெத்து காட்டியது சக்திமான் தொடர்.
சக்திமான் திரைப்படம்..
வெறித்தமான ரசிகர்களை கொண்ட இந்த தொடர் தற்போது திரைப்படமாக தயாராக உள்ளது. “இந்தியாவின் பல அபிமான தொடர்கள் திரைப்படமாக்கப்பட்டு உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ளன. மேலும் இந்தியாவின் பிரபலமான சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விரைவில் அவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | Prabhas: திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ‘ஆதிபுருஷ்’ நடிகர்..!
சக்திமானாக முகேஷ் கண்ணா..
1997 முதல் 2005-ம் ஆண்டு வரை தூர்தர்ஷன் (தமிழில் பொதிகை) தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்தத் பாலிவுட் தொடரை நடிகர் முகேஷ் கண்ணா தயாரித்து இதில் அவரே சக்திமானாகவும் நடித்திருந்தார். சக்திமான் இந்தி மொழியில் எடுக்கப்பட்டு பிறகு, பல்வேறு இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்தத் தொடர் திரைப்படமாக உருவாக உள்ளதாக முகேஷ் கண்ணா இதைப்பற்றி முன்னரே அறிவித்திருந்தார். இப்படம் பற்றிய வீடியோவும் ஏற்கெனவே வெளியாகியிருந்தது. ஆனால் கொரோனா போன்ற காரணங்களால் படத்தின் வேலைகள் தொடங்குவதில் தாமதமானது.
300 கோடி பட்ஜெட்!
தற்போது 'சக்திமான்' தொடர் 200 கோடி ரூபாய் முதல் 300 கோடி ரூபாய் வரையிலான பட்ஜெட்டுடன் திரைப்படமாக உருவாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக முகேஷ் கண்ணா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய முகேஷ் கண்ணா,“சக்திமான் தொடர் திரைப்படமாக உருவாக உள்ளதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சோனி பிக்சர்ஸ் நிறுவனம் 200 முதல் 300 கோடி வரையிலான பட்ஜெட்டில் இப்படத்தைத் தயாரிக்க உள்ளது. கொரோனா தொற்று காரணமாகத் திரைப்படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. குறிப்பாக நான் இதைச் சொல்லியாக வேண்டும். படத்தில் சக்திமான் கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை. படக்குழுவினர் எந்த ஒப்பீடும் வேண்டாம் என்றதால் சிறப்புத் தோற்றத்திலும் நான் நடிக்கவில்லை. படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். யார், யார் நடிக்க இருக்கிறார்கள் என்பது பின்னர் தெரிவிக்கப்படும். இந்தத் திரைப்படம் வேறொரு தரத்தில் வித்தியாசமாக இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.
90’ஸ் மெமரிஸ்..
சக்திமான் தொடர்தான், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் அதிக நாட்கள் ஓடிய தொடர் என்று கூறப்படுகிறது. இந்த தொடருக்கு பல லட்சம் ரசிகர்கள் இருந்தன. குழந்தைகளுக்கான தொடர்தான் என்றாலும் இந்த தொடரை பெரியவர்களும் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். பின்நாட்களில் பவர் ரேஞ்சர்ஸ், மிஸ்டிக் ஃபோர்ஸ் போன்ற நிகழ்ச்சிகள் வரவே, இந்த தொடர் பலரால் கண்டு கொள்ளப்படாமல் போனது. ஆனாலும், இன்றளவும் 90ஸ் கிட்ஸ்களின் மனதில் பசுமையான நினைவாக இந்த தொடர் உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ