நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்குநர் ஷங்கர் இயக்கிவருகிறார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்துக்குத் தமன் இசையமைக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஷங்கர் படத்துக்கு தமன் இசையமைப்பது இதுவே முதன்முறை. வழக்கமான ஷங்கர் படம் போலவே இப்படமும் அதிக பொருட்செலவுடன் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. விவசாயி மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி என இரு ரோல்களில் இப்படத்தில் ராம்சரண் நடித்துவருவதாகக் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா ரிலீஸாக வெளியாக உள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சில நாட்களுக்கு இப்படம் சர்ச்சை ஒன்றில் சிக்கியது. அதாவது இப்படத்தில் நடிக்க ஆட்தேர்வு நடைபெற்றுவருவதாக சமூக வலைதளங்களில் சில பதிவுகள் வலம்வந்தன. இதையடுத்து இது தொடர்பாக அறிக்கைவிட்ட படக்குழு, தங்களுக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனவும் தாங்கள் அதுபோல எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை எனவும் விளக்கம் அளித்தது.


இந்நிலையில் தற்போது புதிய சிக்கல் ஒன்றை இப்படம் சந்தித்துள்ளது. அதாவது, இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்துவந்தது. இதனிடையே, நகராட்சி அதிகாரி ஒருவர், இப்படத்தின் படப்பிடிப்பைத் திடீரென நிறுத்தியுள்ளார்.


மேலும் படிக்க | வாஜ்பாயாக நடிக்கப்போறது யார் தெரியுமா? - வெளியானது எமர்ஜென்ஸி படத்தின் அப்டேட்!


பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும்போது படப்பிடிப்பு நடந்தால் அது மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் எனக் கருதி அவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.


கிடப்பில் போடப்பட்டிருந்த கமல்ஹாசனின் இந்தியன் - 2 திரைப்பட ஷூட்டிங் பணிகளை ஷங்கர் விரைவில் மீண்டும் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | மீண்டும் சர்ச்சைக்குரிய கதையில் கை வைத்த ‘ஜெய்பீம்’ இயக்குநர்!- எந்த வழக்கு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ