சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் சத்யராஜ் மற்றும் சூரி, குத் வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடி வாசல்’ படத்தில் சூர்யா மும்முரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் சூட்டிங் முடிவடைந்தவுடன் இயக்குநர் பாலாவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கிறார் சூர்யா.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சிம்புவுடன் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா? எதிர்பார்ப்பில் முன்னணி நடிகை


பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் ஆகிய படங்களில் ஏற்கனவே சூர்யா நடித்துள்ளார். இரண்டு படங்களும் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், அவர்களின் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது. ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், அதர்வா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.



இந்நிலையில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சூர்யா - பாலா கூட்டணியில் வெளியான நந்தா படத்தில் நடிக்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறுத்துள்ள தகவல் இப்போது வெளியாகியுள்ளது. அவருடைய கதாப்பாத்திரத்தில் ராஜ்கிரண் நடித்திருந்தார். இது குறித்து நடிகர் திலகம் சிவாஜி கணேஷனை அணுகி இயக்குநர் பாலா கதை கூறியுள்ளார். கதாப்பாத்திரம் குறித்து கேட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேஷன், கேரக்டர் பிடித்திருந்தாலும் சொந்த வேலைகள் காரணமாக நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டாராம். அதன்பிறகே ராஜ்கிரண் அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கவைக்க பாலா முடிவு செய்துள்ளார்.


மேலும் படிக்க | ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு வாழ்த்து அனுப்பிய பிரபல நடிகர் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR