நடிகை நல்லெண்ணெய் சித்ரா காலமானார்
பிரபல நடிகையான நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பு காரணமாக காலமானார். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
80களில் பிரபலமாக இருந்தவர் நடிகை சித்ரா. இவர் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார். இயக்குநர் கே.பாலசந்தரால் அவள் அப்படித்தான் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.
பின்னர் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) ஊர்க்காவலன், பொண்டாட்டி ராஜ்ஜியம், உட்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். டைரக்டர் கேஎஸ் ரவிக்குமாரின் சேரன் பாண்டியன் படத்தில் நடிகர் சரத்குமாரின் தங்கையாகவும் சித்ரா நடித்துள்ளார். ஆனால் இவர் நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து பிரபலமானதால் 'நல்லெண்ணெய் சித்ரா' (Nallennai Chitra) என அழைக்கப்பட்டார்.
ALSO READ | Vijay vs rajini: தமிழ் சினிமாவில் ரஜினியை முந்துகிறார் விஜய்!
கடந்த 1990ஆம் ஆண்டு விஜயராகவன் என்பவரை திருமணம் செய்து கொண்ட சித்ராவுக்கு மகாலட்சுமி என்ற மகள் இருக்கின்றார். இவர் இந்தாண்டு பிளஸ் டு முடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது பிரபல நடிகையான நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் நேற்று இரவு 12 மணிக்கு சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் காலமானார். அவருக்கு வயது (56). இது திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. பலரும் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. மேலும் இவரது மறைவிற்கு நடிகை, நடிகர்கள் உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
நிறைய மலையாள படங்களில் நடித்த இவர் சமீபத்தில் என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா என்ற படத்தில் பள்ளி மாணவியாக நடித்தார் என்பது குறிபிடத்தக்கது.
ALSO READ | Rajinikanth Next Movie: தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR