பேச்சுலர், ராட்சசன் படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்!
இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் போன்ற படங்களை தயாரித்த தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான டில்லி பாபு காலமானார்.
தமிழ் சினிமாவில் பல புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்களை தற்போது முன்னணி இயக்குனர்களாக மாற்றிய தயாரிப்பு நிறுவனம் ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி. ஜி.டில்லி பாபு (50) என்பவர் இந்த தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி பேனரில் படம் வெளியானாலே நிச்சயம் புதுமையாக இருக்கும் என்று ரசிகர்கள் என்னும் அளவிற்கு, பல வித்தியாசமான படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், டில்லி பாபு (50) கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவு ஏற்படுத்து தீவிர சிகிச்சை எடுத்து வந்தார் என்று கூறப்படுகிறது. இன்று சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 9ம் தேதி அதிகாலை காலமானார். இவரின் இந்த திடீர் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் இவருடைய மறைவுக்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 10 வருடங்களாக படங்களை தயாரித்து வரும் டில்லி பாபு, 2015ம் ஆண்டு வெளியான உறுமீன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர். இந்த படத்தில் பாபி சிம்ஹா, கலையரசன், ரேஷ்மி மேனன் ஆகியோர் நடித்து இருந்தனர். அதனைத் தொடர்ந்து ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி தயாரித்த மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர், மிரள், கள்வன் போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக மரகத நாணயம், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் போன்ற படங்கள் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது.
இவரது தயாரிப்பில் இயக்குனர்களாக அறிமுகமான பலர் தற்போது முன்னணி இயக்குனர்களாக உள்ளனர். அடுத்தடுத்து படங்களை தயாரிக்க கதைகளை கேட்டு, சிலருக்கு முன்தொகையும் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் டில்லி பாபு. இவரது அடுத்த வெளியீடாக வளையம் என்ற படம் இருந்தது. இந்த படத்தில் அவரது உறவுகார பையனை ஹீரோவாக அறிமுகம் செய்ய இருந்தார். இந்நிலையில் இவரது இந்த திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ