நடிகர் விஜய் 7 ஆண்டுகள் மனைவியை பிரிந்திருந்தாரா? ஒரு ரசிகனின் குரல்
ஒரு ரசிகனின் குரல் என்ற பெயரில் எஸ்.ஏ சந்திரசேகர் வெளியிட்டுள்ள வீடியோ திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.
பிரபல இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ சந்திரசேகர், விவாகரத்து பற்றி வெளியிட்டுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
ஒரு ரசிகனின் குரல் என்ற பெயரில், விவாகரத்து பற்றி எஸ்.ஏ சந்திரசேகர் வெளியிட்டுள்ள வீடியோ திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. அதிலும் இந்த வீடியோவை நன்றாக யோசித்த பிறகே வெளியிட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் திருமண முறிவைப் (Dhanush Aishwarya Divorce) பற்றி பேசுகிறார் என்பதை புரிந்துக் கொள்வது மிகவும் சுலபம்.
இந்த வீடியோவில் திருமணம் என்பது அனுசரித்து வாழ்வது என்றும், விவாகரத்து செய்துக் கொள்பவர்களைப் பற்றி கேள்விப்படும்போது, தானும் மனைவியும் சென்று அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
அதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற பொருளில் பேசிய அவர், தனது வீட்டிலேயே மருமகள் பிரிந்து இருந்ததை மேலோட்டமாக சுட்டிக் காட்டினார்.
கணவன் - மனைவி பிரிவது தனக்கு மிகவும் வருத்தம் கொடுக்கும் என்றும், ஏழு ஆண்டுகள் பிரிந்திருவர்களே சேர்ந்திருக்கிறார்கள் என்றும், தனது வீட்டிலேயே மருமகள் அப்படி இருந்தார் என்று தெரிவித்தார்.’
இதில், தனது வீடு, மருமகள் என்று கூறுவதால், அது தனது மகனும் பிரபல நடிகருமான விஜய் மற்றும் மருமகள் (Actor Vijay)பிரிந்திருந்ததை குறிப்பிடுகிறார் என்று திரையுலகே அதிர்ச்சியடைந்துள்ளது.
ALSO READ | தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து
நமக்கும் கீழே வாழ்பவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு என்று விஜயின் தந்தை முத்தாய்ப்பாய் தெரிவித்தார்.
காலையில் இருந்து இந்தப் பதிவைப் போடலாமா என்று இரட்டை மனதுடன் இருந்தாலும், விவாகரத்து செய்தி கனவாகவோ, பொய்யாகவோ போய்விட வேண்டும் என்று விரும்புவதாக நடிகர் விஜயின் தந்தை தெரிவித்தார்.
சில காலமாக நடிகர் விஜய்க்கும் அவரது தந்தையும் பிரபல இயக்குநரான எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையில் மனவேறுபாடு இருப்பது வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்ததே.
இந்த சூழ்நிலையில், ரஜினிகாந்தின் மகள் விவாகரத்து விவகாரத்தில், விஜயின் தந்தை தனது மருமகளும் இப்படி இருந்தார், ஏழாண்டுகள் பிரிந்திருந்தவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள் என்று கூறியிருப்பது நடிகர் விஜய்க்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.
இந்த வீடியோவில் சந்திரசேகருக்கு முன்னால் இருக்கும் மேஜையில், நடிகர் விஜயின் இளவயது புகைப்படமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது அவர் இந்த விவாகரத்து கருத்து வீடியோவில், யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பேசினாலும், அது தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து என்றும், தனது மருமகள் என்பது நடிகர் விஜயின் மருமகள் சங்கீதா (Sangeetha Vijay) என்பதும் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
வாழ்க்கையை தொலைத்த இடத்தில் தேட வேண்டும். பணமோ, நிம்மதியோ தொலைத்த இடத்தில் தேட வேண்டும். தி நகரில் தொலைத்ததை, திருவல்லிக்கேணியில் தேடினால் கிடைக்குமா? என்றும், தான் ஒரு ரசிகன்; இது ஒரு ரசிகனின் குரல் என்றும் தெரிவித்துள்ளார்.
ALSO READ | தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து; டிபியை மாற்றிய சௌந்தர்யா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR