வாஜ்பாயாக நடிக்கப்போறது யார் தெரியுமா? - வெளியானது எமர்ஜென்ஸி படத்தின் அப்டேட்!
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இயக்கும் எமர்ஜன்ஸி படத்தில், வாஜ்பாய் ரோலில் நடிக்கவுள்ளவர் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சர்ச்சைகளுக்குப் பெயர்போன பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், நடிப்பு மட்டுமல்லாது இயக்கத்திலும் தற்போது கவனம் செலுத்திவருகிறார்.
அந்த வகையில் அடுத்ததாக எமர்ஜன்ஸி எனும் படத்தை அவர் இயக்கவுள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் இந்திரா காந்தியாக கங்கனாவே நடிக்கவுள்ளார்.
ஜெயபிரகாஷ் நாராயணன் ரோலில் அனுபம் கேர் நடிக்கவுள்ளார். இதில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் ரோலில் நடிக்கப்போவது யார் எனும் கேள்வி இருந்துவந்தது. இந்நிலையில் அதைத் தற்போது படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி நடிகர் ஸ்ரேயஸ் தல்பேட் இந்த ரோலில் நடிக்கவுள்ளாராம். ஸ்ரேயஸ் தல்பேட் நடிக்கவுள்ள ரோல் குறித்த ஃபர்ஸ்ட் லுக்கை, கங்கனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் தற்போது கவனம் பெற்றுவருகிறது.
அரசியல் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்துத் திரைப்படங்கள் எடுப்பது சமீப காலமாக அதிகரித்துவருகிறது.
வாஜ்பாயைப் பொறுத்தவரை கங்கனா இயக்கும் இப்படம் மட்டுமல்லாமல் மற்றொரு படமும் அவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகவுள்ளது. அந்த வகையில், எழுத்தாளர் உல்லேக் என்.பி எழுதிய 'The Untold Vajpayee: Politician and Paradox’ எனும் புத்தகத்தைத் தழுவி ஒரு படம் எடுக்கப்படவுள்ளது.
மேலும் படிக்க | அஜித்- 61 ஷூட்டிங் ஸ்பாட் லீக் வீடியோ வைரல்! - அதிர்ச்சியில் படக்குழு!
‘அடல்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் பனுசாலி ஸ்டுடியோஸ் மற்றும் லெஜண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாகத் தயாரிக்கப்படவுள்ளது. 2023ஆம் ஆண்டு படப்பிடிப்பைத் தொடங்கி அவ்வாண்டு வாஜ்பாய் பிறந்த தினத்தில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ