நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் தனக்கு பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். இருப்பினும் கடுமையான உடற்பயிற்சி உள்ளிட்டவற்றால் அதில் இருந்து மீள முயற்சி எடுத்து வருகிறேன் என கூறியிருந்தார். பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பாதிப்புகளில் ஒன்றாக இருந்தாலும், அவற்றில் இருந்து உரிய சிகிச்சை மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் மீள முடியும் என நம்பிக்கை வார்த்தைகளையும் உதிர்த்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | PCOS பாதிப்பு எனக்கு இருக்கிறது - நடிகை ஸ்ருதிஹாசன் ஓபன்டாக்


அவரின் அந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலானது. ஸ்ருதிஹாசன் கடுமையான உடல் பாதிப்புகளை எதிர்கொண்டிருப்பதால் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்றெல்லாம் வாழ்த்துகளை பகிரத் தொடங்கினர். சினிமா வட்டாரத்திலும் ஸ்ருதிஹாசனுக்கு ஆதரவுகள் பறந்தன. சிலர் ஸ்ருதிஹாசனுக்கு இருக்கும் பிசிஓஎஸ் பாதிப்பு குறித்து கவலைகூட தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன் தான் பகிர்ந்த வீடியோ குறித்து விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.



தனக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக பிசிஓஎஸ் பாதிப்பு இருப்பதாகவும், இருப்பினும் தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். பெண்கள் மத்தியில் பிசிஓஎஸ் பாதிப்பு குறித்து நேர்மறையான சிந்தனையை ஏற்படுத்தும் நோக்கில் தான் வீடியோ பகிர்ந்ததை பலர் தவறாகவும், மிகப்பெரிய பாதிப்பு இருப்பது போன்ற சித்திரத்தையும் ஏற்படுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார். பிசிஓஎஸ் பாதிப்பால் கவலைப்படும் அளவுக்கெல்லாம் நான் பாதிக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ள ஸ்ருதிஹாசன், தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.


அதேநேரத்தில் தன் மீது அக்கறை காட்டிய அனைவரும் நன்றி கூறியுள்ளார். தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதாகவும் புதிய வீடியோவில் ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.   


மேலும் படிக்க | பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவிற்கு திடீர் ஆபரேஷன்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR