நடிகர் கமல்ஹாசனின் மூத்தமகளான ஸ்ருதிஹாசன் தற்போது சலார் படத்தில் நடித்துக் கொண்டுள்ளார். மும்பையில் தங்கியிருக்கும் அவர், தனக்கு ஏற்பட்டிருக்கும் உடல் பாதிப்பு குறித்து இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டிருக்கும் அவர், அதில் பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். இது ஒரு மோசமான ஹார்மோன் பிரச்சனை என்றாலும் அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | குடும்பப் பிணைப்பை சித்தரிக்கும் ‘பச்சைக்கிளி’ : புதிய மெகா சீரியல்
அந்த பதிவில் மேலும், " இது ஒரு கடினமான போராட்டம் என்று பெண்களுக்கு தெரியும். இதனை சண்டையாக பார்க்காமல் தான் ஏற்றுக் கொள்கிறேன். இயற்கையான இயக்கமாக என் உடல் அதன் சிறந்ததைச் செய்கிறது. சரியாக சாப்பிட்டு நன்றாக தூங்கி, என் வேலையை ரசித்து செய்து கொண்டிருக்கிறேன். இப்போது என் உடல் சரியாக இல்லை, ஆனால் என் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது, மகிழ்ச்சியாக இருங்கள்.
இந்த சவால்களை ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் அனைவருடனும் இதனை பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறியுள்ளார். பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் அல்லது பிசிஓஎஸ் என்பது பெண்களிடம் உண்டாகும் ஹார்மோன் கோளாறு ஆகும். இந்த பிரச்சனை கொண்டிருக்கும் பெண்கள் கருத்தரிப்பதில் சிக்கலை எதிர்கொள்வார்கள். இந்தப் பிரச்சனை இருப்பவர்களுக்கு சிறிய நீர்க்கட்டிகள் உருவாகும், ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும். இதுதவிர, முடி வளர்ச்சி, முகப்பரு மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளையும் எதிர்கொள்வார்கள்.
இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு முக்கியமாக மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். யோகா, தியானம் ஆகியவற்றில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றுக் கொள்வது நல்லது.
மேலும் படிக்க | பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவிற்கு திடீர் ஆபரேஷன்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR