Kamal Haasan Daughter Shruti Haasan Net Worth, Salary Details: ‘உலக நாயகன்’ கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனுக்கு, தற்போது 38 வயதாகிறது (Shruti Haasan Birthday). இன்று (ஜனவரி 28) இவரது பிறந்தநாளாகும். இந்த நிலையில், இவர் குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்ருதி ஹாசன்:


நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன், ‘ஹே ராம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவிற்குள் அறிமுகமானார். சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த ஸ்ருதி, மும்பையில் உள்ள ஒரு பிரபல பல்கலைக்கழகத்தில் சைக்கலாஜி படித்தார். நடிக்க வருவதற்கு முன்னர், பின்னணி பாடகியாக இருந்தார். தனது தந்தையின் ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் ‘வானம் எல்லை என்பது இங்கில்லை’ பாடலை பாடியிருந்தார். அதே போல, ‘செம்மொழி’ பாடலில் ஹை பிட்சில் பாடி பலரை கவர்ந்தார். 


ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், 2011ஆம் ஆண்டு வெளியான ‘ஏழாம் அறிவு’ படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அடுத்து 2012ஆம் ஆண்டு வெளியான ‘3’ படத்தில் ஜனனியாக வந்து பல இளைஞர்களை கவர்ந்தார். தொடர்ந்து பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்பட பல படங்களில் முக்கிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தமிழில் படங்களின் கதை சரியாக அமையாததை அடுத்து, தெலுங்கு மொழியில் நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக, பெரிய பட்ஜெட்டில் உருவான ‘சலார்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.


ஸ்ருதியின் சொத்து மதிப்பு..


தென்னிந்தியாவின் பணக்கார நடிகர்களுள் ஒருவராக இருப்பவர், கமல்ஹாசன். இதில் சில பங்கு, ஸ்ருதிக்கும் அவரது தங்கை அக்ஷரா ஹாசனுக்கும் சேரும் எனக்கூறப்படுகிறது. இவை அல்லாமல், ஸ்ருதி தனியாக பல கோடி மதிப்பில் சொத்துகளை சேர்த்து வைத்துள்ளாராம் (Shruti Haasan Net Worth). அது, 80 முதல் 90 கோடிகள் வரை சொத்துகள் இருக்கும் என கூறப்படுகிறது. இது மட்டுமன்றி, மும்பையில் உள்ள ஒரு முக்கிய இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இருப்பதாகவும். இதன் மதிப்பும் பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், அவர் ஒரு பெரிய பங்களாவை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், ஆடி கியூ 7 சீரிஸ் கார் உள்ளிட்ட சொகுசு கார்களையும் சொந்தமாக வைத்துள்ளார் ஸ்ருதி ஹாசன். மேலும், இவர் ரியல் எஸ்டேட் தொழிலிலும் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் உறுதிப்படுத்தப்படாத தகவல் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ருதி, தற்போது ஒரு படத்திற்கு 8 கோடி வரை சம்பளமாக வாங்கி வருவதாக கூறப்படுகிறது (Shruti Haasan Salary Details). 


மேலும் படிக்க | 30 படங்களில் பாடி 300 கோடி ரூபாய் சொத்து வைத்திருந்த பிரபல பாடகி! பவதாரணியின் சொத்து மதிப்பு...


காதலர் யார்? 


நடிகை ஸ்ருதி ஹாசன், தற்போது சாந்தனு அசாரிகா (Shruti Haasan Boyfriend Name) என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றார். இவர்கள், தற்போது மும்பையில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பொங்கல் பண்டிகயை தனது காதலர் மற்றும் அப்பாவுடன் சேர்ந்து நடிகை ஸ்ருதி ஹாசன் கொண்டாடினார். இவருடன் எப்போது திருமணம் என்பது குறித்து பலர் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் ஸ்ருதி, தான் தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவிலேயே இல்லை என்பதனை தெரிவித்திருந்தார். 


ஹாலிவுட்டில் களமிறங்கும் ஸ்ருதி..


நடிகை சமந்தா ஹீரோயினாக நடிக்க இருந்த ஹாலிவுட் படம், ‘சென்னை ஸ்டோரி’. இந்த படத்தில் அவருக்கு பதிலாக தற்போது ஸ்ருதி ஹாசன் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது (Shruti Haasan In Hollywood). இந்த படத்தில் அவர் இரு பாலின ஈர்ப்பாளராக (Bisexual) நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்க உள்ளது. 


மேலும் படிக்க | சிங்கிள் சிங்கமாக உலா வரும் அனுஷ்கா! முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ