Shubman Gill: சினிமாவில் நடிக்க இருக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்? அவரே சொன்ன தகவல் இதுதான்!
Shubman Gill Cinema: நடந்து முடிந்த ஐ.பி.எல் சிசனில் கவனம் ஈர்த்த கிரிக்கெட் வீரர்களுள் ஒருவர், சுப்மன் கில். பஞ்சாப்பை சேர்ந்த இவர், இந்த ஐ.பி.எல் சீசனில் குஜராத் அணிக்காக களமிறங்கினார். இவர், தற்போது சினிமாவில் நடிக்க ஆசை உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் போட்டியில் குஜராத் அணியின் முக்கிய வீரராக பார்க்கப்பட்வர் சுப்மன் கில். இவர் களத்தில் வந்து நின்றாலே எதிரணியினரை நடுங்க வைக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார். இவர் தனக்கு சினிமாவில் நடிக்கவும் ஆசை இருப்பதாக கூறியிருக்கிறார்.
டப்பிங் பேசிய கில்..
இந்தியாவில் ஸ்பைடர் மேன் படங்கள் என்றால் மிகவும் பிரபலம். குறிப்பாக, சமீபத்தில் வெளியான ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம், ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் ஆகிய படங்கள் பெரிய அளவில் ஹிட் அடித்தன. இந்த நிலையில், புதிதாக ஸ்பைடர் மேன் அக்ராஸ் தி வர்ஸ் (spider-man: across the spider-verse) என்ற பெயரில் புதிதாக ஒரு படம் உருவாகியுள்ளது. பல நாடுகளில் உள்ள ஸ்பைடர் மேன்கள் ஒன்றாக இணையும் படம் இது. இதில் பஞ்சாபி மற்றும் இந்தி மொழியில் வரும் ஸ்பைடர் மேன்களுக்குாக சுப்மன் கில் டப்பிங் பேசியுள்ளார். இந்த படம் நாளை (ஜூன் 2) வெளியாகிறது.
சினிமாவில் நடிக்க ஆசை..
ஸ்பைடர் மேன் படத்திற்கு டப்பிங்க் கொடுத்த பின்னர் சுப்மன் கில்லிடம் சினிமா குறித்தும் ஹாலிவுட் படத்திற்கு டப்பிங் பேசிய அனுபவம் குறித்தும் கேட்கப்பட்டது. அப்போதுதான் அவர் தனது சினிமா ஆசையை தெரிவித்துள்ளார். “நடிப்பு கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். படங்களில் நடிப்பேனா இல்லையா என்பதை உறுதியாக என்னால் கூற இயலாது. ஆனால், நடிப்பும் சினிமாவும் என்னை பலமுறை அதிகமாக ரசிக்க வைத்துள்லது. நடிப்பு கலை எனக்கு இருந்தாலே அதை மிகப்பெரிய விஷயமாக நான் கருதுகிறேன்” என்று சுப்மன் கில் சினிமா குறித்து கூறியுள்ளார்.
மேலும் படிக்க | ‘லியோ’ முதல் ‘விடா முயற்சி’ வரை..இந்த மாதம் வெளியாகவுள்ள தமிழ் சினிமா அப்டேட்ஸ்!
டப்பிங் அனுபவம் குறித்து கில்..
சினிமாவில் நடிப்பதற்காக தன்னை வளர்த்துக்கொள்ள ஆசைபடும் கில், இதற்கான பயிற்சிகளையும் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. “என் வாழ்வில் ஏதாவது ஒரு நாளில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்..” என்று கூறுகிறார் சுப்மன் கில். தனக்கு சினிமா ஆசை இருந்ததானால்தான் ஸ்பைடர் மேன் படத்திற்கு டப்பிங் கொடுத்ததாகவும் கில் தெரிவித்துள்ளார்.கிரிக்கெட்ட மைதானத்தில் தனது சிறப்பான பேட்டிங்கினால் ரசிகர்களை குஷிப்படுத்திய சுப்மன் கில் அடுத்து சினிமாவின் மூலமாகவும் ரசிகர்களை குஷிப்படுத்த உள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் மருமகன்?
லெஜண்ட் கிரிக்கெட்டர் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர்தான் சுப்மன் கில்லின் மாமனார் என்ற வதந்தி சுப்மன் கில் கிரிக்கெட்டிற்கு வந்த புதிதில் இருந்தே ஆரம்பித்து விட்டது. காரணம், சச்சினின் ஒரே மகளான சாரா டெண்டுல்கரும் சுப்மன் கில்லும் காதலிக்கின்றனர் என்ற தகவலால்தான். இவர்கள் இருவரும் ஒன்றாக டின்னருக்கு செல்வது, காரில் பயணிப்பது என்றிருந்தனர். ஆனால் தங்களது ரிலேஷன்ஷிப் குறித்து இருவருமே வாய்திறக்கவில்லை. இதையடுத்து சில நாட்களுக்கு முன்னர் சுப்மன் கில் மற்றும் சாரா அலிகான் ஒருவரை ஒருவர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் இருந்து அன்பாலோ செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே இருந்த காதல் முறிந்து விட்டதாகவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
மேலும் படிக்க | ‘கலக்கப் போவது யாரு’ தீனாவிற்கு திருமணம்…மணப்பெண் யாரென்று தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ