‘லியோ’ முதல் ‘விடா முயற்சி’ வரை..இந்த மாதம் வெளியாகவுள்ள தமிழ் சினிமா அப்டேட்ஸ்!

June Month Cinema Updates: இந்த வருடம் தமிழ் சினிமாவின் பல முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளிவருகின்றன. விஜய், அஜித், சூர்யா, ரஜினி உள்ளிட்ட பலரது படங்கள் குறித்த அப்டேட்டுகள் இந்த மாதம் வெளியாகவுள்ளன. அவை குறித்த சிறப்பு தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

Written by - Yuvashree | Last Updated : Jun 2, 2023, 10:51 AM IST
  • ஜூன் மாதத்தில் பல முன்னணி ஹீரோக்களின் படங்கள் குறித்த தகவல்கள் வெளிவர உள்ளன.
  • லியோ, கேப்டன் மில்லர் போன்ற படங்களின் படப்பிடிப்புகள் நிறைவடைகின்றன.
  • அஜித்தின் விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
‘லியோ’ முதல் ‘விடா முயற்சி’ வரை..இந்த மாதம் வெளியாகவுள்ள தமிழ் சினிமா அப்டேட்ஸ்! title=

கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களின் படங்கள் பெரிதும் ஓடாமல் ரசிகர்களை ஏமாற்றியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்கள் நல்ல வெற்றியை பெற்றாலும் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை என்ற பேச்சு எழுந்தது. இந்த ஆண்டின் அடுத்த பாதி (ஜூன்-டிசம்பர்) அப்படியிருக்கப்போவது இல்லை. இந்த ஜூன் மாதம் முதலே பல படங்களின் அப்டேட்டுகள் வரிசை கட்டி நிற்கின்றன. அதிலும் குறிப்பாக முன்னணி ஹீரோக்களின் படம்தான் அந்த லிஸ்டில் உள்ளது. இந்த மாதத்தில் வரவுள்ள படத்தின் அப்டேட்டுகள் என்னென்ன தெரியுமா?

தளபதி 68:

வெங்கட் பிரபுவுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் விஜய். இது, இவரது 68ஆவது படம். லியோ படத்தை முடித்த கையோடு இந்த படத்தின் வேலைகளை தொடங்க இருக்கிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் பூஜை இந்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | 'சமந்தா காட்டில் செம மழை' தோல்வி படத்திற்கு 4 விருதுகள்..ஹாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்கிறார்!

லியோ-ஃபர்ஸ்ட் லுக்:

லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் லியோ படத்தின் அப்டேட்டும் இந்த மாதம் வெளியாக உள்ளது. இந்த படம் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் (LCU) இருக்கிறதா இல்லையா என்ற ரசிகர்களின் கேள்விக்கும் இந்த மாதம் விடை தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் இந்த மாதத்திற்குள் வெளியாகும் என கூறப்படுகிறது.

கேப்டன் மில்லர்-ஃபர்ஸ்ட் லுக்:

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம், கேப்டன் மில்லர். சானி காயிதம் படத்தை இயக்கிய அருண் மாதீஸ்வரன் இந்த படத்தை டைரக்டு செய்கிறார். வரலாற்று பின்னணியை கொண்ட படமாக இது அமைந்துள்ளதால் ரசிகர்கள் இந்த படத்தினை மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இம்மாதம் வெளியாகவுள்ளதாக தகவல். 

கங்குவா-க்ளிம்ஸ்:

சூர்யாவின் 42ஆவது படமான கங்குவா, சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வருகிறது. சூர்யா முதன் முறையாக இது போன்ற ஃபேண்டசி படத்தில் நடிக்கிறார். அது மட்டுமன்றி, படத்தின் டிஜிட்டல் உரிமம் முன்னரே பல கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு விட்டதால் ரசிகர்கள் “அப்படி என்னதான் இந்த படத்தில் இருக்கும்..” என்று ஆர்வத்தின் மிகுதியில் உள்ளனர். இந்த படத்தின் க்ளிம்ஸ் வீடியோ இந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவீரன்-முதல் சிங்கிள்

ப்ரின்ஸ் நாயகன் சிவகார்த்திகேயன்-அதிதி சங்கர் ஆகியோர் நடித்துள்ள படம், மாவிரன். இந்த படத்தினை, மண்டேலா இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கி இருக்கிறார். ஆகஸ்டு மாதம் வெளியாகவுள்ள இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் இந்த மாதம் வெளியாகும் என ரசிகர்கள் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

ஜெயிலர்-முதல் சிங்கிள்:

ஆகஸ்டு 10 அன்று வெளியாகவுள்ளது, ஜெயிலர் திரைப்படம். ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தை, நெல்சன் திலீப் குமார் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் பாடல் இந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடாமுயற்சி-படப்பிடிப்பு ஆரம்பம்:

அஜித் நடிக்கும் விடா முயற்சி படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் தொடங்கவுள்ளதாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. மேலும், படத்தின் இயக்குநரே இதில் பயங்கர வில்லனாகவும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

படப்பிடிப்பு நிறைவு:

பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பி இந்த மாதத்துடன் நிறைவுக்கு வருவதாக திரையுலக வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. தங்கலான் படம், இந்த வருடத்தின் இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ படத்தின் படப்பிடிப்பும் இந்த மாதத்துடன் நிறைவுக்கு வருகிறது. காஷ்மீரில் பாதி படம் உருவாக்கப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் செட் போட்டு படத்தின் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங், இந்த மாதத்திற்குள் நிறைவடைய உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. பிறகு, படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | D50: தனுஷின் 50ஆவது படத்தில் இணையும் த்ரிஷா? இருவரும் மும்பையில் உள்ளதாக தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News