‘கலக்கப் போவது யாரு’ தீனாவிற்கு திருமணம்…மணப்பெண் யாரென்று தெரியுமா?

KPY Dheena Marriage: தனியார் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற தீனாவிற்கு திருமணம் நடைபெற இருக்கிறது. மணப்பெண் யார் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Jun 1, 2023, 12:04 PM IST
  • கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலக்கியவர் தீனா.
  • மாஸ்டர், கைதி போன்ற படங்களில் நடித்திருந்தார்.
  • இவருக்கு இன்று திருமணம்.
‘கலக்கப் போவது யாரு’ தீனாவிற்கு திருமணம்…மணப்பெண் யாரென்று தெரியுமா?  title=

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்தது, கலக்கப்போவது யாரு என்ற காமெடி ஷோ. இதன் முதல் மூன்று சீசன்களில் பங்கேற்ற பலர், இன்று தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரங்களாக திகழ்கின்றனர். ரோபாே சங்கர், சிவகார்த்திகேயன் என பலர் அந்த பிரபலங்களின் பட்டியலில் இருக்கின்றனர். அவர்களுடன் இணைந்தவர்தான், KPY தீனா. இவருக்குதான் இப்போது திருமணம் நடைபெற இருக்கிறது.

கலக்கப்போவது யாரு தீனா:

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் முதன் முதலில் நுழைந்த போது பார்ப்பதற்கு ஸ்கூல் பையன் போல இருந்தவர் தீனா. இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குநராக பல நாட்கள் பணிபுரிந்த தீனா, மூன்றாவது சீசனில்தான் கேமரா முன் வந்தார். இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்ட தீனாவிற்குள் அபாரமான திறமை ஒளிந்திருப்பதை பார்த்த சிலர் இவரை இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மோட்டிவேட் செய்துள்ளனர். 

மேலும் படிக்க | D50: தனுஷின் 50ஆவது படத்தில் இணையும் த்ரிஷா? இருவரும் மும்பையில் உள்ளதாக தகவல்!

போட்டியாளராக கலக்கல்..

‘பார்க்கதான் சுள்ளான்..சூடானேன்..சுளுக்கெடுத்துருவேன்..’ என்ற பட டைலாக்கை போல பார்ப்பதற்கு அப்பாவித்தனமாகத்தான் இருப்பார் தீனா. ஆனால் இவரது பர்ஃபாமன்ஸை மேடையில் பார்த்தால் அய்யய்யோ வயிறு குலுங்க ஒரே சிரிப்புதான். இவருடன் சேர்ந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர், சரத். மொட்டை ராஜேந்திரன் போல தோற்றம் கொண்டு சரத்தும் தனுஷ் போன்ற தோற்றம் கொண்ட தீனாவும் ஒன்றாக சேர்ந்து மேடையில் செய்யும் ரகளைகள் அனைத்தும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. நிகழ்ச்சி முடிவுக்கு வந்தவுடன் எல்லோரும் வெவ்வேறு திசைகளில் பறந்து விட, தீனா சினிமா பக்கம் வந்தார். வந்தவருக்கு ஜாக்பாட்டாக லோகேஷ் கனகராஜ்ஜின் கைதி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அடுத்து, மாஸ்டர் படத்திலும் விஜய்யுடன் இணைந்து நடித்தார். இவை மட்டுமன்றி தனது மிமிக்கிரி திறமையாலும் காமெடியான உடல்மொழியினாலும் பலரை ஈர்த்தவர் தீனா. 

தீனாவிற்கு டும் டும் டும்...

தீனா தற்போது ஒரு பக்கம் படம் ஒரு பக்கம் மேடை விழாக்களில் பங்கேற்பது என பிசியாக உள்ளார். இவரை கையில் பிடிக்க முடியவில்லை என்று கூட தீனாவின் நண்பர்கள் சிலர் கூறுகின்றனர. இந்த நிலையில், இவருக்கு இன்று திருமணம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீனாவின் திருமணம், திருவாரூரில் நடைபெறஉள்ளது. இதில், தொலைக்காட்சி மற்றும் சினிமா நட்சத்திரங்கள் சிலர் கலந்து கொள்ள உள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தீனாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. 

மணப்பெண் யார் தெரியுமா? 

தீனா, தனது திருமணம் குறித்து ஒரு பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் பலருக்கு நேரில் சென்று திருமண அழைப்பிதழை கொடுக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் சினிமா பிரபலங்கள் திருமணத்திற்கு வருவார்களா என்பது தெரியவில்லை என்றும் அதனால்தான் திருமண வரவேற்ப்பை ஜூன் 10ஆம் தேதி சென்னையில் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

காதல் திருமணமா? 

பிரபலங்கள் பலர் காதலித்து திருமணம் செய்து கொண்டது போல இவரும் காதல் திருணம்தான் செய்து கொள்கிறாரோ என ரசிகர்கள் சந்தேகித்தனர். இதற்கு தீனா தனது பேட்டியில் விளக்கமிளித்துள்ளார். தங்களுடையது அரேஞ்ச்டு மேரேஜ்தான் என்றும் இனிதான் லவ் பண்ண வேண்டும் என்றும் கூறியுள்ளார். தான் திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண் க்ரிஃபிக்ஸ் டிசைனராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | ‘லியோ’ முதல் ‘விடா முயற்சி’ வரை..இந்த மாதம் வெளியாகவுள்ள தமிழ் சினிமா அப்டேட்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News