தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக இருக்கும் நடிகர் சித்தார்த், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த படம் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியானது. தனது முதல் படமான பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார். பின் தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகரானார். தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடபட்டு தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய நச்சத்திரமாக வளர்ந்தார். முன்னதாக இவர் நடிப்பில் தெலுங்கு திரையுலகில் ‘மகாசமுத்திரம்’ திரைப்படம் வெளியானது. தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை, அருவம் ஆகிய படங்கள் 2019 ஆம் ஆண்டில் வெளியானது.  இதனிடையே சில காலம் திரைப்படங்களில் நடிப்பதில் சற்று ஒதுங்கி இருந்த நடிகர் சித்தார்த் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் டக்கர். இந்தப் படத்தின் டீஸர் கடந்த சிலர் நாட்களுக்கு முன்பு வெளியானது. காதல் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் யோகிபாபு, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர். அடுத்த தலைமுறையை ஈர்க்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ஜூன் 9 ஆம், 2023 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும் என தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் ’டக்கர்’ தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க, வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்கிறார்.


மேலும் படிக்க | தமிழ் சினிமாவின் 'நீங்காத பிறை' - பாலு மகேந்திராவின் பிறந்தநாள் இன்று


முன்னதாக இப்படத்தின் பாடல்கள் இப்படத்தின் எதிர்பார்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது  டக்கர் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளனர். பணம் சம்பாதித்து பணக்காரர் ஆக வேண்டும் என்று படத்தின் நாயகன் இருக்கும்போது எதிர்பாராத வகையில் பணக்கார கதாநாயகியுடனான சந்திப்பு கிடைக்க பின் நடக்கும் கதையாக டக்கர் திரைப்படம் உருவாகியுள்ளது. தற்போது இந்த டிரைலர் ரசிகர்களால் கவரப்பட்டு வைரலாகி வருகிறது. இப்படங்கள் மூலம் நடிகர் சித்தார்த் மீண்டும் தென்னிந்தியாவின் முன்னணி நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.  


டிரைலர் வீடியோ இதோ: 




இதற்கிடையில் தற்போது நடிகர் சித்தார்த் தமிழில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனுடன் இவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, மாதவன் ஆகியோருடன் இணைந்து நடிகர் சித்தார்த் ‘டெஸ்ட்’ என்ற படத்திலும் மற்றும் ‘சித்தா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பிச்சைக்காரன் 3 வந்தால் என்னவாகும்? கலக்கத்தில் மக்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ