Simbu Marriage Update: சிம்பு என்றாலே சர்ச்சை என்பதுதான் அனைவருக்கும் நியாபகம் வரும். அவரது தந்தை டி. ராஜேந்திரனின் படங்களின் மூலம் சிறுவயத்திலேயே அறிமுகமான சிம்பு, தமிழ் திரையுலகிற்கே நெந்துவிடப்பட்டவர்களில் ஒருவராகவே பார்க்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இளைஞர்களின் டிரெண்ட்செட்டராக இருக்கும் சிம்பு, பல ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வருகிறார். இடையில், தவிர்க்க இயலாத சில இடைவெளிகளின் மூலம் பெரும் பாடத்தை கற்றுக்கொண்டதாக கூறும் சிம்பு, விரைவிலேயே தனது உடல்எடையை குறைத்து, அவருக்கே உரிதான வசீகரத்துடன் மீண்டு வந்தார். 


செக்க சிவந்த வானம், வந்தா ராஜாவாதான் வருவேன், மாநாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல வெரைட்டிகளை காட்டுபவதில் சிம்பு வல்லவர். இவரது நடிப்பில் 'பத்து தல' திரைப்படம் தயாராகி தற்போது, மார்ச் 30 ஆம் தேதி ரிலீசுக்கு ரெடியாக உள்ளது. ஆனால், இந்த திரைப்படத்திற்கு பின் சிம்பு வேறு எந்த படத்திலும் நடிப்பதாக தெரியவில்லை. அவரது அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என கூறப்படுகிறது.


மேலும் படிக்க | சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் - திரைவிமர்சனம்!


அவரது திரைப்பட வாழ்வு ஒருபுறமிருக்க, அவரது தனிப்பட்ட காதல் வாழ்விலும் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தன. இவர் நடிகை நயன்தாராவுடன் காதலில் இருந்து வந்த நிலையில், சில வருடங்களிலேயே அவர்கள் பிரிந்தனர். அடுத்து அவர் நடிகை ஹன்சிகாவை காதலித்து வந்த நிலையில், அதுவும் பிரிவை சந்தித்து. சிம்பு காதலித்த இருவரும் தற்போது திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வரும் நிலையில், சிம்பு திருமணம் குறித்து மூச்சே விடமால் இருக்கிறார்.


அவரின் உடன்பிறந்தவர்களுக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், வீட்டில் மூத்தவரான இவர் தனது திருமணத்தை தள்ளிவைத்தக்கொண்டே வருகிறார் என கூறப்பட்டது. அவர் திருமணம் குறித்த அப்டேட் விரைவில் வரும் என அவரது குடும்பத்தினர் தரப்பில் இருந்தும் அவ்வப்போது தகவல் வருவது வாடிக்கைதான். இந்நிலையில், சிம்புவின் திருமணம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 


சிம்புவின் திருமணம் குறித்த பேச்சுதான் திரையுலகம் முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சிம்பு தற்போது ஒரு இலங்கையை சேர்ந்த பெண்ணை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, அந்த பெண் இலங்கையில் மருத்துவராக உள்ளார் எனவும், அவரது தந்தை பெரும் தொழிலதிபர் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது சிம்புவின் படங்களுக்கான அப்டேட்டுக்கு காத்திருக்கும் ரசிகர்களுக்கு, தனது திருமண அப்டேட்டையும் சிம்பு விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ