சினிமாவில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த சிம்பு மாநாடு படம் மூலம் கம்பேக் கொடுத்தார். அதனையடுத்து அவர் பல படங்களில் நடித்துவருகிறார். அந்தவகையில் விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் இயக்குநர் கௌதம் வாசுதேவுடன் மீண்டும் இணைந்துள்ளார். அப்படத்துக்கு வெந்து தணிந்தது காடு என்று பெயரிடப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை தழுவி எடுக்கப்படும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடிக்கின்றனர். வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இரண்டு சிங்கிள்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.



இந்நிலையில் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ராதிகா ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டனர். அதேபோல், ஏராளமான சிம்புவின் ரசிகர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று ஆரவாரம் செய்தனர்.


 



ட்ரெயலரை கமல் ஹாசன் வெளியிட்டார். இதனையடுத்து மேடையேறி பேசிய நடிகர் சிம்பு, கமலிடம் “உங்களது எந்தப் படத்தை நான் ரீமேக் செய்ய வேண்டும் அல்லது இரண்டாம் பாகத்தில் நடிக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கமல் ஹாசன், “ நீங்கள் நிறைய படங்கள் நடிக்க வேண்டும். ரீமேக், இரண்டாவது பாகத்தில் எல்லாம் நடிக்க வேண்டாம்.


என்னுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும்" என கமல் கேட்டுக்கொண்டார். எனவே சிம்பு - கமல் கூட்டணியில் படம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.


மேலும் படிக்க | தளபதி விஜய் பாடல் மற்றொரு சாதனை - ரசிகர்கள் கொண்டாட்டம்


முன்னதாக பேசிய படத்தின் இயக்குநர் கௌதம் வாசுதேவ், வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் வரும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEata