ஆர்.ஜே.பாலாஜி சொத்து மதிப்பு விவரம்: ஆரம்பத்தில் சில படங்களில் சிறிய ரோல்களில் நடித்து தற்போது ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்திருப்பவர் ஆர்.ஜே பாலாஜி. அதன்படி தற்போது இவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆர்.ஜே பாலாஜி:
சென்னையை சேர்ந்த வானொலி ஒலிபரப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவர் பிக் எப்.எம் 92.7ல் ஒலிபரப்பான டேக் இட் ஈசி மற்றும் கிராஸ் டாக் (தற்போது இல்லை) போன்ற நிகழ்ச்சிகளினால் பெரிதும் அறியப்படுகிறார். இவர் தீயா வேலை செய்யனும் குமாரு (2013) மற்றும் வடகறி (2014) ஆகிய திரைபடங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். 2015 இல், இது என்ன மாயம், யட்சன் மற்றும் நானும் ரவுடி தான் ஆகிய படங்களில் தோன்றினார். நானும் ரௌடிதான் படத்தில் நடித்ததற்காக ஆர்.ஜே பாலாஜி சிறந்த நகைச்சுவை நடிகருக்கான SIIMA விருதை வென்றார். 


மேலும் படிக்க | தங்கையின் நிச்சயதார்த்தத்தில் குத்தாட்டம் போட்ட சாய் பல்லவி! வைரலாகும் வீடியோ..


2016 இல், அவர் ஜில் ஜங் ஜக் மற்றும் புகாஜ் ஆகிய படங்களில் தோன்றினார், அங்கு அவர் "போடு போடு" பாடலில் பாடகராகவும் பாடலாசிரியராகவும் பணியாற்றினார். முத்தின கத்திரிகாவில் (2016), பாலாஜி கதாநாயகன் முத்துப்பாண்டி ( சுந்தர் சி. ) உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களை குரல்வழி மூலம் அறிமுகப்படுத்துகிறார். பின்னர் அவர் தேவி, கடவுள் இருக்கான் குமாரு (2016), பறந்து செல்ல வா (2016), காற்று வெளியிடை (2017), ஸ்பைடர் (2017) மற்றும் கீ (2017) ஆகிய படங்களில் தோன்றினார். RJ பாலாஜி LKG (2019) படத்தின் மூலம் முழு ஹீரோவானார். இப்படம் தமிழக பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டராக உருவெடுத்துள்ளது. 
 
அவர் இயக்குனராக அறிமுகமான படம் மூக்குத்தி அம்மன் (2020). 2018 ஆம் ஆண்டு ஹிந்தி பிளாக்பஸ்டர் படாய் ஹோவின் ரீமேக்கான வீட்லா விஷேஷம் (2022) என்ற நகைச்சுவை-நாடகத் திரைப்படத்தை இயக்கினார். 


சிங்கப்பூர் சலூன் திரைப்படம்:
காமெடி கதைகள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகர் ஆர்.ஜே.பாலாஜி ரன் பேபி ரன் படத்துக்குப் பின் நடித்துள்ள படம் “சிங்கப்பூர் சலூன்” திரைப்படம். கோகுல் இயக்கியுள்ள இந்த படம் இன்று தியேட்டரில் வெளியாகிறது. தற்போது படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.


ஆர்.ஜே பாலாஜி சம்பளம்:
இதனிடையே தற்போது சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்துள்ள ஆர்.ஜே.பாலாஜி, இதற்காக 8 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இவர் "ரன் பேபி ரன்" படத்திற்காக 4 கோடி சம்பளம் வாங்கியிருந்தார், என்றும் தற்போது தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.


ஆர்.ஜே பாலாஜி சொத்து மதிப்பு:
இந்நிலையில் தற்போது சம்பளத்தை உயர்த்தியுள்ள நடிகர் ஆர்.ஜே பாலாஜி சொத்து மதிப்பு எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மிக குறுகிய காலத்திலே டாப் ஹீரோ ரேஞ்சிற்கு பிரபலம் ஆன ஆர்ஜே பாலாஜி பல கோடி சொத்து வைத்திருக்கிறார். மேலும் சமபீத்தில் இவர் தான் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட கனவு கார் ஒன்றை பார்த்து பார்த்து வடிவமைத்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி டெல்லிக்கு சென்று அந்த காரை பார்த்து பார்த்து தன் விருப்பத்திற்கு ஏற்ப தயார் செய்துள்ளாராம். பல அதிநவீன வசதிகளுடன் இந்த கார் தயார் செய்யப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | அர்ஜுன் தாஸ் நடிக்கும் அடுத்த படம் ‘போர்’! வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ