சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாளவளிக்கு வெளியான பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. தெலுங்கு மார்க்கெட்டில் இந்த படம் நல்ல ஓபன்னிங்காக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது பிரின்ஸ். இதனால், அடுத்ததாக நடித்துக் கொண்டிருக்கும் மாவீரன் படத்தை தெலுங்கில் பெரிய அளவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கும் சிவகார்த்திகேயன், அதற்காக செம ஸ்கெட்ச் ஒன்றை போட்டுள்ளார். புஷ்பா படத்தில் நடித்த வில்லன் நடிகரை மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குநருடன் மோதல்


மண்டேலா படத்தை இயக்கிய இயக்குநர் மடோன் அஸ்வின், சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். படத்தின் சூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், திடீரென இயக்குநர் மடோன் அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே மோதல் என்ற தகவல் பரவியது. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், சென்னை மழை காரணமாகவே படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாக விளக்கம் கொடுக்கும் வகையில் மற்றொரு கிசுகிசு பரவியது. 


மேலும் படிக்க | மீண்டும் ரிலீஸ்-ஆ....வசூலை தெறிக்க விடும் லவ் டுடே படம்


சிவகார்த்திகேயன் ஸ்கெட்ச்


கோலிவுட்டில் மிகப்பெரிய மார்க்கெட் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், டோலிவுட்டை குறி வைத்து காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். பிரின்ஸ் ஏமாற்றிவிட்டாலும், முன்பைவிட சிவகார்த்திகேயன் மார்க்கெட் டோலிவுட்டில் உயர்ந்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்தபடத்தில் இந்த பிஸ்னஸ் இன்னும் பெரிய அளவில் இருக்க வேண்டும் என எண்ணும் சிவகார்த்திகேயன் பிரபல தெலுங்கு காமெடி நடிகரும், புஷ்பா படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் சுனிலை மாவீரன் படத்தில் கொண்டு வந்துள்ளார். நடிகர் சுனில் மாவீரன் படத்தில் இணைந்திருப்பதை சாந்தி டாக்கீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


மேலும் படிக்க | ஜிபி முத்துக்கு அடித்த ஜாக்பாட்; மாஸ் ஹீரோ படத்தில் நடிக்க வாய்ப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ