இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘சீமராஜா’ படத்தை தொடர்ந்து தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்திலும், இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்திலும் பிசியாக நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இதில் ராஜேஷ் இயக்கும் படத்திற்கு ‘மிஸ்டர்.லோக்கல்’ என பெயரிடப்பட்டுள்ளது.


ரவிக்குமார் இயக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தின் 60 % படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. எனினும் படத்தின் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை. 



இந்த இரு படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இயக்குநர் பி.எஸ்.மிதரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.


இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனின் 16-வது படம் ஆகும். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இயக்குநர் பாண்டிராஜ்  இயக்கத்தில் மெரினா படம் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த சிவகார்த்திகேயன், தற்போது அவரது இயக்கத்தில் மீண்டும் இணையவது குறிப்பிடத்தக்கது.


படத்தில் பணியாற்ற உள்ள மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.