தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த கொரோனா காரணமாக நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கொடிய கொரோனா தொற்றால் (Coronavirus) அரசியல் தலைவர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். 


ALSO READ | கொரோனாவால் உயிரிழந்த போலீசார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்


இந்நிலையில் தமிழக அரசு சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது., கொரோனா பெருஞ்தொற்று வேகமாக பரவி நமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் நிறைய உயிர் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதை தடுப்பதற்காக நமது தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறார்கள். நமக்கு பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில் சிலரை உங்களிடம் இந்த வீடியோ மூலம் பகிர்ந்து கொண்டுள்ளேன். இதில் மிக முக்கியமானது தடுப்பூசியை செலுத்தி கொள்வது. நான் என்னுடைய முதல் டோசை செலுத்தி கொண்டேன். அவசியம் இருந்தால் மட்டுமே வெளியே வரவும். சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும். கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அதை விட மிக முக்கியம் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்து கொள்ளுங்கள். 


 



 


கொரோனா குறித்து எந்த பயமும் இல்லாமல் நமக்காக போராடிக் கொண்டிருக்கிற முன் களப்பணியாளர்களுக்கு நாம் செய்யும் மரியாதையும் அதுதான். எல்லாருமே நினைத்தால் நிச்சயம் இதிலிருந்து மீண்டு வர முடியும். ஒன்றிணைவோம் கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். நம்மையும் காப்போம் ; நாட்டையும் காப்போம். கொரோனவை வெல்வோம்; மக்களை காப்போம் என்று அவர் குறிபிட்டுள்ளார். 


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR