சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். நெல்சன் இயக்கி உள்ள இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடித்துள்ள இந்த படத்தில் அவருடன் இணைந்து யோகிபாபு, வினய் என பலர் நடித்துள்ளனர். மேலும் டாக்டர் (Doctor) திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 


ALSO READ | டாக்டர் ரிலீஸ் குறித்து வெளியான புதிய தகவல்; படக்குழு முக்கிய முடிவு


இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் வரும் மார்ச் 26ஆம் தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால் தேர்தல், கொரோனா இரண்டாவது அலை போன்ற காரணங்கள் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு டாக்டர் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர்.


இந்நிலையில் தற்போது எந்தவித சிக்கலுமின்று இன்று (அக்டோபர் 9) காலை 5 மணிக்கு வெளியாகியுள்ளது டாக்டர் திரைப்படம். டாக்டர் வெளியானதை முன்னிட்டு சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பதிவில்.,


நாளை என்றும் நம் கையில் இல்லை நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே என்றால் கூட போராடு நண்பா என்றைக்கும் தோற்காது உண்மைகளே..எதிர் நீச்சலடி வென்று ஏற்றுக் கொடி. இன்று முதல் 'டாக்டர்' உங்கள் திரையரங்குகளில். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கண்டுகழித்து மகிழுங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் படத்தை பார்த்த பல்வேறு திரையுலக பிரபலங்கள் சிவகார்த்திகேயனுக்கு தங்களுடைய ட்விட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


இதற்கிடையில் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் Twitter விமசனத்தை நாம் இங்கே காண்போம்:


 



 



 



 




 


ALSO READ | தொடரும் சர்ச்சை : வெளியாகுமா டாக்டர் திரைப்படம்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR