சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் டாக்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் டாக்டர் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய படப்பிடிப்பு, இந்த ஆண்டு ஜனவரியில் நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் மீண்டும் கொரோனா (Coronavirus) இரண்டாம் அலை பரவியதால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. இந்நிலையில் அநிருத் இசையில் செல்லம்மா, ஓ பேபி போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இதனால் டாக்டர் திரைப்படத்திற்கு அதிக எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது.
தற்போது அக்டோபர் 9ஆம் தேதி டாக்டர் (Doctor) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு வெளியீட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையில் இன்னும் பேச்சுவார்த்தை முடிவடையவில்லை. இதனால் சென்னையின் பெரும்பான்மையான திரையரங்குகளில் இன்னும் முன்பதிவு தொடங்கப்படவில்லை.
ALSO READ: டாக்டர் படத்தில் எனக்கு 10 டயலாக்தான் – சிவகார்த்திகேயன்
இரண்டு ஆண்டுகளாக விளம்பரம் செய்யப்படும் திரைப்படம் என்பதால் அதற்கான வரவேற்பு குறைவாகவே இருக்கும் என்பது திரையரங்கு உரிமையாளர்களின் எண்ணம். அதே நேரம் கொரோனா காரணமாக படத்தின் பட்ஜெட் அதிகரித்திருப்பதால் அதிக தொகை கேட்கின்றனர் தயாரிப்பாளர் தரப்பினர். இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
வெறும் 5% பங்கு பிரிப்பதில் பிரச்சனை நீடித்து வருவதாக தயாரிப்பாளர் தரப்பினர் தெரிவிக்கின்றனர். மற்றொரு புறம் திரைப்படங்கள் பல ஓ.டி.டி தளத்தை நோக்கி செல்வதால் திரையரங்குகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையும் கருத்தில் கொண்டு திரையரங்கு உரிமையாளர்கள் கொஞ்சம் இறங்கி வர வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். எங்கள் பட்ஜெட்டுக்கு நீங்கள் வராவிட்டால் நாங்கள் ஓ.டி.டி பக்கம் சென்றுவிடுவோம் என்று மிரட்டும் தன்மையும் தற்போது திரைத்துறை பக்கம் தலைதூக்கியுள்ளது.
ஆனால் திரையரங்குகளை காக்க மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில்தான் வெளியாக வேண்டும் என நடிகர் விஜய் (Vijay) முடிவு செய்தார். அதனடிப்படையில் சிவகார்த்திகேயனும் தியேட்டரில்தான் படத்தை வெளியிடுவோம் என தீர்மானமாக இருப்பதாகவும் திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் டாக்டர் திரைப்படத்தையும் ஓடிடியில் நேரடியாக எதிர்பார்க்கலாம் என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ: சிவகார்த்திகேயனின் டாக்டர்; முக்கிய தகவலை வெளியிட்ட படக்குழு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR