சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'டான்' படத்தின் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு இன்னும் குழப்பமாகவே இருந்து வருகிறது.  லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் மார்ச் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது.  இருப்பினும் இந்த தேதியில் தான் படம் வெளியாகுமா என்பது குறித்த சந்தேகம் நிலவி வந்தது.  ஏனெனில் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படமும் மார்ச் 25ம் தேதி தான் வெளியாக இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | 'டான்' படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல தொலைக்காட்சி!


இந்த பெரிய பட்ஜெட் படத்தினால் சிவகார்த்திகேயனின் படத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.  மேலும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தான் தமிழ்நாட்டில் ஆர்ஆர்ஆர் படத்தை விநியோகிக்க இருக்கிறது, அதனால் வணிக ரீதியிலான பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக டான் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றவுள்ளதாக கூறப்படுகிறது.  இதன் காரணமாக மார்ச் 25ம் தேதி திரையரங்குகளில் டான் படம்  வெளியாக இருந்த நிலையில் படத்தை மே-12ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.



இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் படத்தின் சில போஸ்டர்கள் அல்லது படத்தின் டீசரில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சமீபத்தில் தான் இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி வாங்கியிருப்பதாகவும், மேலும் இப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்ப்ளிக்ஸ் வங்கியிருப்பதாகவும் சில தகவல்கள் வெளியானது.  அனிருத் இசையமைப்பில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.



டாக்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இப்படத்தில் இணைந்துள்ள சிவகார்த்திகேயன்-பிரியங்கா அருள் மோகன் ஜோடி  ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  மேலும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, ஷிவாங்கி, சூரி, முனீஷ்காந்த், காலி வெங்கட், ஆர்ஜே விஜய், பால சரவணன் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்து இருக்கின்றனர்.


மேலும் படிக்க | 'SK20'-ல் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக RRR நடிகை?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR