விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி, வெள்ளித்திரையில் நுழைந்த சிவகார்த்திகேயன் (SivaKarthikeyan), வெள்ளித்திரை நடிகராக இன்று 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதனையொட்டி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் வெளியிட்டுள்ள அவர், இந்தப் பயணத்தில் உடனிருந்த அனைவருக்கும் நன்றி எனக் கூறியுள்ளார். நம்பிக்கையை மட்டுமே மூலதனமாக கொண்டு தொடங்கிய இந்தப் பயணத்தில், இன்று ரசிகர்களின் இதயங்களிலும் இல்லங்களிலும் கிடைத்திருக்கும் இடத்தை நினைத்துக்கூட பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | 'ராக்கெட்டில் போனாரா சிவகார்த்திகேயன்?': நடிகரின் அசுர வளர்ச்சியை புகந்து தள்ளும் ரசிகர்கள்


முதல் படத்தில் வாய்ப்பளித்த இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் அந்தப் படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு நன்றி கூறியுள்ள சிவகார்த்திகேயன், தங்களோடு சேர்ந்து தன்னையும் மிளரச் செய்த சக கலைஞர்களுக்கும், தன் படங்களில் பணியாற்றிய தொழிலாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகிஸ்தர்கள் உள்ளிட்ட அனைத்து சினிமா துறை நண்பர்களுக்கும் நன்றி எனக் கூறியுள்ளார்.



தாய் தமிழுக்கு நன்றி தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன், சகோதரனாக, நண்பனாக ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களுக்கும் தன் நன்றியை தெரிவித்துள்ளார். இறுதியாக, மக்களை மகிழ்விப்பதும், ரசிகர்கள் அளித்திருக்கும் இந்த வாழ்வை பிறருக்கும் பயன்படுமாய் வாழ்வது மட்டுமே, எப்போதும் தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார். 


ALSO READ | ’டான்’ சிவகார்த்திகேயன் நாளை கொடுக்கப்போகும் சர்பிரைஸ் இதுதான்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR