தனுஷுக்கு போட்டியாகும் சிவகார்த்திகேயன்..? ‘மாவீரன்’ பட நாயகனின் அடுத்த மூவ் இதுதான்..!

‘மாவீரன்’ பட நாயகன் சிவகார்த்திகேயன் அடுத்து ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.
தொகுப்பாளராக இருந்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்து பாலிவுட்டிற்குள் நுழைய உள்ளதாக பிரபல நடிகர் ஆத்வி ஷேஷ் கூறியுள்ளார்.
‘மாவீரன்’ நாயகன்:
மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம், மாவீரன். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். மிஷ்கின், சரிதா ஆகியோரும் படத்தில் இடம் பெற்றுள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் இப்படம் ‘மஹாவீருடு’ என்ற பெயரில் வெளியாகின்றது. இதன் படவிழா, சமீபத்தில் நடைப்பெற்றது.
மேலும் படிக்க | பிரபல சின்னத்திரை நடிகர்கள் வீட்டில் அரங்கேறிய சோகம்..! போலீசார் விசாரணை
ஐதராபாத்தில் பட விழா..!
‘மஹாவீருடு’ படத்தின் ப்ரமோஷன் விழா, சமீபத்தில் ஐதராபாத்தில் நடைப்பெற்றது. இந்த விழாவில் பிரபல நடிகர் ஆத்வி ஷேஷ்
கலந்து கொண்டார். அப்போது சிவகார்த்திகேயன் குறித்து புகழ்ந்து பேசிய அவர், விழா மேடையில் அவர் குறித்த இன்னொரு தகவலையும் பகிர்ந்து கொண்டார். அதை கேட்டதில் இருந்து ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
பாலிவுட்டில் சிவகார்த்திகேயன்?
ஐதராபாத்தில் நடைப்பெற்ற அந்த விழாவில் பேசிய ஆதி சேஷ், சிவகார்த்திகேயன் விரைவில் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறினார். இந்த விஷயத்தை கூறியதற்காக சிவகார்த்திகேயனிடம் அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். தான் சிவகார்த்திகேயனின் நல்ல நண்பன் என்பதை தாண்டி, அவரது மிகப்பெரிய ரசிகன் என்றும் அந்த நடிகர் கூறினார். சிவகார்த்திகேயன் பெரிய ஸ்டார் மட்டுமல்ல அவருக்கு பெரிய இதயமும் இருக்கிறது என, ஆதி சேஷ் விழா மேடையில் கூறினார்.
தனுஷை குறிவைக்கும் சிவகார்த்திகேயன்?
தனுஷ், கடந்த 2013ஆம் ஆண்டு ‘ராஞ்சனா’படம் மூலம் பாலிவுட்டிற்குள் எண்ட்ரி கொடுத்தார். அவர், இந்தி திரையுலகிற்குள் காலடி எடுத்து வைத்த நேரம், அவருக்கு ஹாலிவுட்டிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து ராஞ்சனா படத்தை இயக்கிய ஆனந்த எல்.ராயுடன் இன்னொரு படத்திலும் கைக்கோர்த்துள்ளார் தனுஷ். தற்போது சிவகார்த்திகேயனும் பாலிவுட்டிற்குள் நுழைந்திருக்கிறார் என்ற தகவல் வெளிவந்ததை தொடர்ந்து,‘இவர் தனுஷிற்கு போட்டியாக வந்து விடுவாரோ..’ என ரசிகர்கள் சில சந்தேகிக்கின்றனர்.
தொகுப்பாளர் டூ நடிகர்..
சிவகார்த்திகேயன், இவ்வளவு பெரிய நடிகராக வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தது அவரது கடின உழைப்பும் நகைச்சுவையான பேச்சு திறமையும்தான் என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு அறிமுகமான இவர் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். குறிப்பாக ஜோடி நம்பர் 1, அது இது எது போன்ற நிகழ்ச்சிகள் இவராலேயே செம ஹிட் அடித்தன. அது மட்டுமன்றி, பல பிரபலமான ஹீரோக்களின் பட விழாக்களையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார். எந்த பிரபலமான கலைஞர் மேடயேறினாலும் அவர்களை சிரிக்க வைத்து அனுப்பும் அளவிற்கு நகைச்சுவை திறனுடன் இருந்தார். நடிக்க வந்த புதிதில் இதே போல காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த அவர், சமீப காலமாக அதிலிருந்து மாறுபட்டு கொஞ்சம் சீரியஸான ரோல்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக, அதிகம் பேசிக்கொண்டே இருக்கும் அவரது சுபாவத்திற்கு மாறாக கொஞ்சமாக பேசும் ஹீரோவாக ‘டாக்டர்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இனி வெளியாகவுள்ள படங்களிலும் அவர் தனது நடிப்பில் இது போல வித்தியாசம் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவீரன் ரிலீஸ்:
மாவீரன் திரைப்படம் இந்த மாதம் 14ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. முதலில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த மாதம் 11அன்றுதான் வெளியாவதாக இருந்தது. ஆனால், அதற்கு முந்தைய நாள் ‘ஜெயிலர்’ படம் ரிலீஸ் ஆகும என அறிவிக்கப்பட்டு விட்டதால், மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது.
மேலும் படிக்க | பிரபல திரைப்பட தயாரிப்பாளர் உயிரிழப்பு..! முதல்வர் உள்பட பலர் இரங்கல்…!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ