சிவகார்த்திகேயனை ரஜினியுடன் ஒப்பிட்ட மிஷ்கின்..! எந்த விஷயத்தில் தெரியுமா..?

Maaveeran Trailer Launch: பிரபல இயக்குநர் மிஷ்கின் நேற்று நடைப்பெற்ற ‘மாவீரன்’ பட விழாவில் கலந்து கொண்டு சிவகார்த்திகேயனையும் நடிகர் ரஜினிகாந்தையும் ஒப்பிட்டு பேசினார்.  

Written by - Yuvashree | Last Updated : Jul 3, 2023, 06:25 AM IST
  • மாவீரன் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது.
  • இதில் இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்டார்.
  • இதில் ரஜினியையும் சிவகார்த்திகேயனையும் ஒப்பிட்டு பேசினார்.
சிவகார்த்திகேயனை ரஜினியுடன் ஒப்பிட்ட மிஷ்கின்..! எந்த விஷயத்தில் தெரியுமா..? title=

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு ட்ரைலரை வெளியிட்டனர். அதில் பிரபல இயக்குநர் மிஷ்கின் பேசிய விஷயம் ஒன்று வைரலாகி வருகிறது. 

‘மாவீரன்’ திரைப்படம்..

தொகுப்பாளராக இருந்து தற்போது உச்ச நடிகராக விளங்குபவர், சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் இருந்தே தனது கடின உழைப்பால் முன்னேறி வரும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஷ்வின், சிவகார்த்திகேயனை வைத்து தற்போது ‘மாவீரன்’ படத்தை இயக்கியுள்ளார். இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, சரிதா, மிஷ்கின் போன்ற பலர் நடித்துள்ளனர். படம், இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வெளயீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. இதில், பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். பிக்பாஸ் புகழ் ராஜு மற்றும் பிரபல தொகுப்பாளினி பாவனா ஆகியோர் இந்த விழாவை தொகுத்து வழங்கினர். 

மேலும் படிக்க | பிரபல நடிகர் மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு..! காரணம் என்ன..?

‘சிவகார்த்திகேயன் ரஜினிதான்..’

‘மாவீரன்’ படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்று வெளியான ட்ரைலரில், இவரது கதாப்பாத்திரம் நெகடிவ் ஷேட் பொருந்தியது போல காண்பிக்கப்பட்டது. படம், ஃபேண்டசி பாணியில் உருவாகியுள்ளது. விழாவில் கலந்து கொண்ட அனைவரும் பேசினர். இயக்குநர் மிஷ்கினும் மேடையேறி ‘மாவீரன்’ படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்தும் சிவகார்த்திகேயன் குறித்தும் சில வார்த்தைகளை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது, “நடிகை சரிதா மேடம் சிவகார்த்திகேயனை ‘ரஜினி போல அடக்கமானவர்’ என என்னிடம் கூறுவார். சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரியெல்லாம் அல்ல..ரஜினியேதான்” என்று மிஷ்கின் பேசினார். ஏற்கனவே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்யா அஜித்தா என்ற சண்டை ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது மிஷ்கின் சிவகார்த்திகேயனை ‘ரஜினி போல..’ என கூறியுள்ளது வைரலாகி வருகிறது. 

சிவகார்த்திகேயன் பதில்..

மிஷ்கின் பேசியதை தொடர்ந்து மேடையேறி பேசிய சிவகார்த்திகேயன் ரஜினியுடன் தன்னை ஒப்பிட்டு பேசியதற்கு மிஷ்கினிற்கு பதில் கொடுத்தார். அப்போது, “நீங்க பெரிய வார்த்தை எல்லாம் சொன்னிங்க....ரஜினி சார் பயங்கரமான ஆள்.. நானும் ரஜினி சார் மாதிரி எப்பவும் Humble 'ah இருக்கணும்னு நினைக்கிறது உண்டு... கண்டிப்பா அப்படி இருப்பேன் சார்” என்று அவர் கூறினார். 

விஜய் குறித்து மிஷ்கின்..

இயக்குநர் மிஷ்கின் தன் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடத்து வந்தார். தற்போது பிற இயக்குநர்களின் படங்களிலும் இவருக்கு நடிக்க வாய்ப்புகள் வருவதால் அதையும் இவர் தட்டிக்கழிப்பதில்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்திலும் மிஷ்கின் நடித்துள்ளார். நேற்றைய மாவீரன் பட விழாவில் மிஷ்கின் மேடை ஏறுகையில் ரசிகர்கள் ‘லியோ..லியோ..’ என கத்தி ஆரவாரம் செய்ய ஆரம்பித்தனர். அப்போது பேசிய மிஷ்கின், “லியோன்னா சிங்கம்பா..விஜய் சிங்கம்தான்..’ என்றார். 

வந்தவர்களுக்கு சாப்பாடு கொடுத்த படக்குழு..

‘மாவீரன்’ ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு பிரபலங்கள் மட்டுமன்றி பல ஆயிரம் ரசிகர்களும் வந்து சேர்ந்தனர். இவர்களது வருகையால் விழாக்கோலம் போல மாவீரன் திரைப்பட விழா காட்சியளித்தது. இவர்களை நெகிழ வைக்கும் வகையில் படக்குழு ஒரு செயலை நேற்று செய்தது. விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் ஒரு காட்டன் பையில் சாப்பாடு பொட்டலத்தை அளித்திருக்கிறது படக்குழு. இதைப்பார்த்த சில ரசிகர்கள், “படவிழாவிற்கு வரும் ரசிகர்களுக்கு இது போல சாப்பாடு கொடுப்பது இதுவே முதன்முறை..’ என்று பதிவிட்டுள்ளனர். மேலும், இது படவிழா ஏற்பாட்டாளர்களின் நல்ல உள்ளத்தை காட்டுவதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

மெரினாவில் ஆரம்பித்த பயணம்..

பிரபல டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன், படிப்படியாகத்தான் சினிமாவில் பெரிய நடிகராக மாறினார். இவர் முதன்முதலில் ஹீரோவாக நடித்திருந்த ‘மெரினா’ படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மெரினா கடற்கரையில்தான் நடைப்பெற்றது. அந்த விழாவில் வெறும் 50 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அதே சிவகார்த்திகேயன் இன்று வளர்ந்து கோடிக்கணக்கில் ரசிகர்களை சம்பாதிக்கும் நடிகராக மாறியது தங்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக அவரது ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | தனுஷ் உள்பட பல திரை பிரபலங்கள் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News