தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி குறித்து அனைவருக்கும் நன்கு தெரியும், எவ்வித திரை பின்புலமும் இல்லாமல் சின்னத்திரையிலிருந்து வந்து தற்போது வெள்ளித்திரையில் தடம் பதித்து ஜொலித்து கொண்டிருக்கிறார்.  இவர் நடிப்பில் வெளியான படங்கள் எல்லாம் பெரும்பாலான குழந்தைகளால் ரசிக்கப்படுகிறது, இவரது நகைச்சுவையான பேச்சிற்கே பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது.  தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படம் வெளியாகவுள்ளது.  'மண்டேலா' படத்தின் மூலம் பிரபலமான மடோன் அஷ்வின் இயக்கியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார்.  சுனில், மிஸ்கின், கவுண்டமணி, யோகி பாபு போன்ற பலர் நடித்திருக்கும் இந்த படம் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க |  காசுக்கு ஆசைப்பட்டு லாஸ்லியா, ஷிவானி செய்த காரியம்! கைது செய்யப்பட வாய்ப்பு!


ஆகஸ்ட் 11ம் தேதி சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படம் வெளியாகவுள்ள நிலையில், ஆகஸ்ட் 10ம் தேதியன்று ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படம் வெளியாகப்போவதாவாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 'பீஸ்ட்' படத்தின் விமர்சனங்களுக்கு ஆளான இயக்குனர் நெல்சன் திலீப்குமார், 'ஜெயிலர்' படத்தின் மூலம் தனது பெருமையை மீண்டும் நிலைநாட்டுவாரா என்கிற எதிர்பார்ப்பும் பலரிடையே இருந்து வருகிறது.  சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன் லால், சிவராஜ்குமார், யோகி பாபு போன்ற பலர் நடித்துள்ளனர்.  இந்த முறை பாக்ஸ் ஆபிசில் ரஜினிகாந்தோடு, சிவகார்த்திகேயன் மோதுவார் என்று கூறப்படுகிறது.  இருப்பினும் சிவகார்த்திகேயன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகர் என்பதால் அவர் படத்தோடு, தனது படம் மோதுவதை சிவகார்த்திகேயன் விரும்பமாட்டார் என்று கூறப்படுகிறது.



மறுபுறம் நெல்சன் திலீப்குமாரும், சிவகார்த்திகேயனுக்கு நண்பர் என்பதாலும் இருவரும் தங்களது படங்கள் மோதிக்கொள்வதை விரும்பமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.  அதேசமயம் 'ஜெயிலர்' படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதால், படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படலாம் என கூறப்படுகிறது.  இது ஒருபுறமிருக்க, ஜெயிலர்-மாவீரன் படத்தால் சிவகார்த்திகேயன், திமுக அமைச்சரின் கோபத்திற்கு ஆளாகியுள்ளதாக இணையத்தில் செய்திகள் வட்டமடித்து கொண்டிருக்கிறது.  அதாவது திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் திமுகவின் வரலாற்றை கூறும் விதமாக, கலைஞர் கருணாநிதி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டு "எங்கள் முதல்வர் நமது பெருமை" என்ற பெயரில் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.  இந்த கண்காட்சியினை பார்வையிட மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் வருகை புரிகின்றனர்.  


இந்நிலையில் திருச்சியை சேர்ந்த நடிகர் சிவகார்த்திகேயனும் இந்த கண்காட்சியை காண வந்துள்ளார், அவரை அமைச்சர் கே.என்.நேரு உட்பட பலரும் வரவேற்றனர்.  கண்காட்சியை பார்த்து முடித்த பின் செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள முதல்வரின் படங்கள் தன்னை எவ்வளவு கவர்ந்தது என்பது குறித்து பேசினார்.  அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் ஜெயிலர் படமும், மாவீரன் படமும் ஒன்றாக மோதிக்கொள்வது குறித்து கேள்வி எழுப்பினர்.  உடனே அமைச்சர் கே.என்.நேரு அவமதிப்பது போன்று வேகமாக தனது இருக்கையை விட்டு எழுந்து சென்றுவிட்டார்.  அமைச்சரின் செயலை கண்டு சிவகார்த்திகேயன் அதிர்ச்சியடைந்தார், பின்னர் அந்த தேதியில் படம் திரைக்கு வருவதை 'ஜெயிலர்' படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்று சிவகார்த்திகேயன் பதிலளித்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்.  பத்திரிகையாளர் சந்திப்பில் சிவகார்த்திகேயன் பதிலளித்து கொண்டிருக்கும்போது, அவரை அவமதிப்பது போன்று அமைச்சர் கே.என்.நேரு எழுந்து சென்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது.


மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் 2: விலை உயர்ந்த கார்களில் படம் பார்க்க வந்த பிரபலங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ