ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் - அனிருத்! இயக்குனர் யார் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் முதல்முறையாக நடிக்கும் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தற்போது இணையத்தில் வெளியாகி பேசுபொருள் ஆகி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 28, 2023, 06:57 AM IST
  • நடிகராக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்.
  • அன்பறிவு இந்த படத்தை இயக்க உள்ளனர்.
  • இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் - அனிருத்! இயக்குனர் யார் தெரியுமா? title=

தமிழ் சினிமாவின் தற்போதைய தலைமுறையின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் மற்றும் யூத் ஐகான் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோர் ஒரு புதிய திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்கள் என்ற செய்தி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. முன்னணி ஸ்டண்ட் இயக்குனர் அன்பறிவு இயக்கத்தில் இருவரும் நடிக்க உள்ளனர்.  இதற்கிடையில், இந்த படம் குறித்த ரெட் ஹாட் அப்டேட்கள் இப்போது வெளிவந்துள்ளன, அதில் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை லோகேஷ் எழுதியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதுவும் வழக்கம் போல லோகேஷ் ஸ்டைலில் ஆக்‌ஷன் த்ரில்லராக இருக்கும். 75 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | ஜியோ சினிமாவில் இந்த 10 சூப்பர் ஹிட் படங்களை இலவசமாக பார்க்கலாம்!

அன்பறிவு இந்த படத்தை மேலும் பெரிதாக்க திட்டமிட்டு வருவதாகவும், மூன்று மாதங்களில் முழுப் படப்பிடிப்பையும் முடித்துவிட திட்டமிட்டுள்ளனர்.  தற்போது லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்யின் 'லியோ' படத்தின் மற்றொரு முக்கிய ஷெட்யூல் படப்பிடிப்பை அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளார். இந்த படப்பிடிப்பு ஜூன் மாதம் வரை நடைபெற உள்ளது, அதன் பிறகு முழுவீச்சில் அடுத்தகட்ட பணிகள் நடைபெற உள்ளது.  லியோ படத்தில் விஜய் தவிர த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, மனோபாலா, ஜனனி குணசீலன், ஜார்ஜ் மரியன், அபிராமி வெங்கடாசலம், கதிர் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி லியோ படம் வெளியாக உள்ளது. லியோ படம் முடிந்த பின்னர் தான் அன்பறிவு இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.  'கைதி 2', 'விக்ரம் 3', ரஜினிகாந்த் படம் மற்றும் பிற LCU பட திட்டங்கள் என வரிசையாக பிஸியாக இருந்த லோகேஷ் தற்போது நடிகராகவும் உருமாற உள்ளார்.  

அனிருத் தற்போது 'இந்தியன் 2', 'ஜெயிலர்', 'லியோ', 'ஏகே 62' மற்றும் ஷாருக்கானின் 'ஜவான்' ஆகிய இந்திய சினிமாவின் முன்னணி ஹீரோக்களுக்கு இசையமைத்து வருகிறார். லோகேஷ்- அன்பறிவு படம் தொடங்கும் போது அனிருத் புதிய படங்களில் கமிட் ஆக மாட்டார் என்று கூறப்படுகிறது.  இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாக இல்லை.  அனிருத் ஏற்கனவே பாடல்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே பலமுறை அனிருத் நடிக்க வருகிறார் என்ற செய்திகள் வந்துள்ளன. ஆனால் இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதி ஆகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.  ஏற்கனவே லாரன்ஸை வைத்து அன்பறிவு ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தனர்.  இதற்கான அறிவிப்பும் வெளியானது.  ஆனால், அந்த சமயத்தில் அவர்கள் கேஜிஎப் 2 படத்தில் பிசியாக இருந்ததால் அந்த படத்தில் இருந்து வெளியே வந்தனர்.  தற்போது மீண்டும் படத்தை இயக்க ஆவலாக உள்ளனர். 

மேலும் படிக்க: "குக் வித் கோமாளி 4" அடுத்த வார கலக்கல் எபிசோட், வெளியான மாஸ் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News