‘DON’ இத்தனை கோடி வசூலா! - படக்குழுவே வெளியிட்ட புதிய தகவல் இதோ!
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் வெளியாகி 12 நாட்கள் ஆகியுள்ள நிலையில் படத்தின் வசூல் நிலவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 13ஆம் தேதி வெளியானது டான்.
சிவகார்த்திகேயன் மற்றும் லைகா இணைந்து தயாரித்த இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டது. தமிழகத்தில் சுமார் 600க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ள டான், ஒட்டுமொத்தமாக உலக அளவில் சுமார் 900 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கல்லூரி கலாட்டா, தந்தை- மகன் பாசம் என கலந்துகட்டி உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. சிவகார்த்திகேயனின் முந்தைய படமான டாக்டர் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்றது.
இதனால் டான் படம் அதை முறியடிக்குமா எனும் கேள்வி இருந்துவந்தது. இதனிடையே முதல் நாளிலேயே சுமார் 13 கோடி ரூபாய் வசூலை நெருங்கிய இப்படம் சிவகார்த்திகேயனுக்கு முதல் நாளில் அதிக வசூல் செய்து தந்த 2ஆவது படமாக அமைந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான சீமராஜா இதில் முதலிடத்தில் உள்ளது.
டான் வெளியாகி 12 நாட்கள் ஆகியுள்ளன. இந்நிலையில் இப்படத்தின் வசூல் நிலவரத்தை படக்குழு வெளியிடுள்ளது. அவ்வகையில் இப்படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளதாம். அத்துடன் வசூல் ரீதியாக ப்ளாக் பஸ்டர் படமாக டான் அமைந்துள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | அந்த 30 நிமிடம்... ‘டான்’ படம் பார்த்துக் கண்ணீர்விட்ட ரஜினி!
பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூல் சாதனையைப் படைத்துவந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் படங்களும் அடுத்தடுத்து 100 கோடி வசூலை ஈட்டுவது அவர் பெரிய ஸ்டார் எனும் அந்தஸ்தை அடைந்துவிட்டார் என மீண்டும் உறுதி செய்துள்ளது.
மேலும் படிக்க | ‘விக்ரம்’ படத்தின் கதை இதுதானா? அதிலும் இப்படி ஒரு சர்ப்ரைஸா?!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR