பிரின்ஸ் சிவகார்த்திகேயன்... வெளியான அப்டேட்; குஷியில் ரசிகர்கள்

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பிரின்ஸ் படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பாளராக நுழைந்து பிறகு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக மாறி தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருக்கென்று பெரும் ரசிகர்க் பட்டாளம் இருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் சிவகார்த்திகேயனை மிகவும் விரும்புகின்றனர். சமீபத்தில் இவர் நடித்த டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்கள் வசூலில் சக்கைப்போடு போட்டன. அந்த இரண்டு படங்களும் 100 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பேக் டூ பேக் 100 கோடி க்ளப்பில் சிவகார்த்திகேயன் நுழைந்தார். இதனைப் பார்த்து கோலிவுட்டே ஆச்சரியம்தான் பட்டது.
இந்தச் சூழலில் இரண்டு படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'பிரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது.இந்தப் படமானது சிவகார்த்திகேயனுக்கு முதல் பைலிங்குவல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துவருகிறார். மேலும் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இந்த படத்துக்கு பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
'பிரின்ஸ்' திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முழுவதுமாக நிறைவடைந்தது. இந்நிலையில், 'பிரின்ஸ்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ட்ரெய்லர் நாளை (அக்டோபர் 9) வெளியாகவுள்ளதாக படக்குழு ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
அந்தப் ப்ரோமோவில் சிவகார்த்த்கேயன் தோன்றி,“டாக்டர், டான் இரண்டு படங்களுக்கும் நீங்கள் ஆதரவு மிகவும் பெரியது. பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது. என்னுடைய படம் தீபாவளிக்கு ரிலீஸ்வாது இதுவே முதல்முறை. அதனால் மிகவும் ஆவலாக இருக்கிறேன்” என கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோவை நெட்டிசன்கள் அதிகம் பகிர்ந்துவருகின்றனர். 'பிரின்ஸ்' திரைப்படம் அக்டோபர் 21ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Bigg Boss போட்டியாளர்கள் இவர்கள் தான்! ஒரே வீட்டில் குடியிருக்கப் போகும் பிரபலங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ